'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா? வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு!
பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த, சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா' இந்த சீரியலின் சுமார் 500 எபிசோடுகளை கடந்து விட்டதால் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரோஷினி. மாடல் அழகியான இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
இவருக்கு ஜோடியாக அருண் பிரசாத் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில், கண்ணம்மா கர்ப்பிணியாக இருந்த போது... வீட்டை விட்டு விரட்டப்பட்டு கையில் பையுடன் ரோடு ரோடாக சுற்றும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். ஆனால் அந்த மீம்ஸ்கள் அனைத்தும் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி சீரியலையும் ரோஷினியையும் மேலும் பிரபலமடைய வைத்தது.
தற்போது தைரியமான பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க போராடும் கண்ணம்மாவின் கதாபாத்திரம் இல்லத்தரசிகளை வெகுவாக கவர, சீரியலும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும், கண்ணம்மாவை அவரது மாமியார் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பின் , ஒருவழியாக கண்ணம்மாவை பார்த்து விட்டார்.
அதே போல்... பல்வேறு திருப்புமுனைகளுடன், பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்கள் 1000 -யிரம் எபிசோடுகளை கடந்து, 'பாரதி கண்ணம்மா' சீரியல் ஒளிபரப்பாகி வெற்றி பெற வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.