MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bethlehem Kudumba Unit: தமிழ் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த பெத்லஹேம் குடும்ப யூனிட் ரிலீஸ் தேதி இதோ

Bethlehem Kudumba Unit: தமிழ் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த பெத்லஹேம் குடும்ப யூனிட் ரிலீஸ் தேதி இதோ

Bethlehem Kudumba Unit Tamil Release: நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களை நோக்கி வருகிறது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 25 2026, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெத்லஹேம் குடும்ப யூனிட் தமிழ் ரிலீஸ் தேதி
Image Credit : Bhavana Studios

பெத்லஹேம் குடும்ப யூனிட் தமிழ் ரிலீஸ் தேதி

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜுவின் ரசிகர்களுக்கு தமிழ் பதிப்பை திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மமிதா பைஜு புதிய படம்
Image Credit : stockPhoto

மமிதா பைஜு புதிய படம்

மமிதா பைஜுவுக்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே கணிசமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், நிவின் பாலி ‘பிரேமம்’, ‘நேரம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்த இருவரும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் தமிழ் பதிப்பிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மமிதா பைஜுவின் சமீபத்திய தமிழ் படங்கள் மூலம் உருவான ரசிகர் வட்டமும், நிவின் பாலியின் நீண்டகால தமிழ் ரசிகர்களின் ஆதரவும் படத்துக்கு சாதகமாக அமையலாம்.

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?

34
பிரேமலு தயாரிப்பாளர்கள்
Image Credit : Fahadh Faasil/ Facebook

பிரேமலு தயாரிப்பாளர்கள்

‘பிரேமலு’ படத்தை தயாரித்த பாவனா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பாவனா ஸ்டுடியோஸ் பேனரில் உருவாகும் ஆறாவது படம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரேமலு’ பெற்ற மிகப்பெரிய வரவேற்புக்குப் பிறகு வெளியாகும் இந்தப் படம் என்பதால், தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்பு என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

44
மலையாள படம் தமிழ் ரிலீஸ்
Image Credit : BHAVANA STUDIOS

மலையாள படம் தமிழ் ரிலீஸ்

படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு மட்டுமின்றி சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பணிக்கர், வினய் ஃபோர்ட், ரோஷன் ஷானவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரிந்தா, பார்வதி அய்யப்பதாஸ் மற்றும் மீனாட்சி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் பதிப்பிற்கான வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழ் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுவது என்பது வெளியீட்டிற்குப் பிறகே தெரியவரும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மமிதா பைஜு
சினிமா
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Related Stories
Recommended image1
Jailer 2 : மொழி சர்ச்சையில் சிக்கிய அல்ல பொலெலோ பாடல்... பதறிப்போய் விளக்கம் கொடுத்த அருண்ராஜா காமராஜ்
Recommended image2
Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved