MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாயகன் முதல் கே.ஜி.எஃப் 2 வரை... அமேசான் பிரைம் ஓடிடி-யில் உள்ள சிறந்த தமிழ் படங்கள் ஒரு பார்வை

நாயகன் முதல் கே.ஜி.எஃப் 2 வரை... அமேசான் பிரைம் ஓடிடி-யில் உள்ள சிறந்த தமிழ் படங்கள் ஒரு பார்வை

Best movies on amazon prime : உலகளவில் நெட்பிளிக்ஸ் முன்னணி ஓடிடி தளமாக இருந்தாலும், இந்தியாவில் அமேசான் பிரைம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் அமேசான் பிரைம் வசம் தான் உள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 07 2022, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து ஏராளமான தொழில்கள் முடங்கிப்போய் கடும் இழப்பை சந்தித்தன. ஆனால் அந்த காலகட்டத்தில் கல்லாகட்டியது மட்டுமின்றி விஸ்வரூப வளர்ச்சி கண்ட பிசினஸ் என்றால் அது ஓடிடி தளங்கள் தான். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு டைம் பாஸாக இருந்தது இந்த ஓடிடி தளங்கள் தான்.

ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் திரையுலகிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழத்தொடங்கின. புதுப்படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வருகின்றன. உலகளவில் நெட்பிளிக்ஸ் முன்னணி ஓடிடி தளமாக இருந்தாலும், இந்தியாவில் அமேசான் பிரைம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் அமேசான் பிரைம் வசம் தான் உள்ளன.

இதையும் படியுங்கள்... முதலில் கஜினி பட வாய்ப்பு எனக்கு தான் வந்தது... நடிக்க மறுத்தது ஏன்? - பலவருட சீக்ரெட்... ஓப்பனாக சொன்ன மாதவன்

26

ரஜினி படங்கள்

ரஜினி நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான அபூர்வ ராகங்கள், முத்து, 16 வயதினிலே, மன்னன், சந்திரமுகி, தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சிவாஜி, எந்திரன், பாட்ஷா, படையப்பா ஆகிய படங்கள் அமேசான் பிரைமில் உள்ளன.

36

கமல் படங்கள்

கமல் நடித்த சதிலீலாவதி, நாயகன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஹே ராம், மைக்கேல் மதன காமராஜன், மூன்றாம் பிறை, அன்பே சிவம், பாபநாசம், வேட்டையாடு விளையாடு, அவ்வை சண்முகி என அவர் நடித்த ஏராளமான படங்கள் இதில் உள்ளன.

இதையும் படியுங்கள்... கமல் மகளுக்கு என்னாச்சு...! உடல்நலம் குறித்து பரவிய தகவல்... பதறிப்போய் வீடியோ மூலம் விளக்கமளித்த சுருதிஹாசன்

46

விஜய் படங்கள்

நடிகர் விஜய்யின் மாஸ் படங்களான மாஸ்டர், பிகில் மதுர, போக்கிரி, சிவகாசி, கத்தி, துப்பாக்கி, குருவி, ஜில்லா, வில்லு, தலைவா, திருமலை, தெறி ஆகியவையும், ரொமான்டிக் படங்களான ராஜாவின் பார்வையிலே, ஒன்ஸ்மோர், நிலாவே வா, பிரியமானவளே, விஷ்ணு, கண்ணுக்குள் நிலவு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காவலன், காலமெல்லாம் காத்திருப்பேன் ஆகியவையும் இந்த ஓடிடி தளத்தில் உள்ளன.

56

அஜித் படங்கள்

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, ரெட், வில்லன், ஜனா, ஆரம்பம், வீரம், அசல், வேதாளம், திருப்பதி, வரலாறு, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், காதல் கோட்டை, ஆசை, ஜி, சிட்டிசன், பில்லா 2, விஸ்வாசம், சிட்டிசன், கிரீடம், காதல் மன்னன், தீனா, ஆனந்த பூங்காற்றே, ஏகன், முகவரி, உள்ளிட்ட படங்கள் அமேசான் பிரைமில் உள்ளன.

இதையும் படியுங்கள்... டாப் இந்தி நடிகர்களின் படங்களெல்லாம் பிளாப்... தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தால் ஆட்டம் கண்ட பாலிவுட்

66

சூப்பர் ஹிட் படங்கள்

சூர்யாவின் ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய படங்கள் இதில் நேரடியாக வெளியாகி வரவேற்பை பெற்றன. இதுதவிர மணிரத்னத்தின் எவர்கிரீன் ஹிட் படங்களான பாம்பே, தளபதி, நாயகன், ரோஜா, உயிரே, இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகியவையும் அமேசான் பிரைமில் உள்ளன. தனுஷின் புதுப்பேட்டை, கர்ணன், அசுரன் ஆகியவையும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், மாஸ்டர் போன்ற படங்களும், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, பா.இரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள், விக்ரமின் மகான், யாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கே.ஜி.எஃப் 2 என ஏராளமான ஹிட் படங்கள் இதில் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image2
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image3
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved