- Home
- Cinema
- முதலில் கஜினி பட வாய்ப்பு எனக்கு தான் வந்தது... நடிக்க மறுத்தது ஏன்? - பலவருட சீக்ரெட்... ஓப்பனாக சொன்ன மாதவன்
முதலில் கஜினி பட வாய்ப்பு எனக்கு தான் வந்தது... நடிக்க மறுத்தது ஏன்? - பலவருட சீக்ரெட்... ஓப்பனாக சொன்ன மாதவன்
Madhavan : முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்தது மாதவன் தானாம்.

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் மாதவன். இப்படத்திற்கு பின் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாய் என பெயர் எடுத்த மாதவன், தற்போது ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கிய ராக்கெட்ரி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனில் பழுவூர் ராணி நந்தினியாக ஐஸ்வர்யா ராய் - யாருக்கு ஜோடி தெரியுமா?
வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் படிபடியாக வசூலை குவித்து வருகிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி படத்தின் கதையை அமைத்திருந்தார் மாதவன். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதில் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்தும் இருந்தார் மாதவன்.
இதையும் படியுங்கள்... கமல் மகளுக்கு என்னாச்சு...! உடல்நலம் குறித்து பரவிய தகவல்... பதறிப்போய் வீடியோ மூலம் விளக்கமளித்த சுருதிஹாசன்
ராக்கெட்ரி படத்தில் நடிகர் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். மாதவன் மீதுள்ள நட்பின் காரணமாக இப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம் சூர்யா. இதனிடையே சமீபத்தில் நடிகர் மாதவனும், சூர்யாவும் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடினர். அப்போது பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... வாடகை வீடு தான்... யாருக்கும் காட்டுனதில்ல - 11 வருஷமா வாழ்ந்து வரும் வீட்டை முதன்முறையாக காட்டிய ஜூலி
அதில் முக்கியமாக முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் என்று கூறி அதிர்ச்சி அளித்தார் மாதவன். அப்படத்தின் இரண்டாம் பாதியின் கதை பிடிக்காததால் நடிக்க மறுத்துவிட்டதாக கூறினார். ஆனால் சூர்யாவின் கடின உழைப்பால் தான் அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என மாதவன் பாராட்டினார். இதைக்கேட்ட ரசிகர்கள் ‘இவ்ளோ பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்களே மேடி’ என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.