- Home
- Cinema
- மீண்டும் நாளை நெல்சனின் பீஸ்ட் அப்டேட்..இந்த முறையாவது ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
மீண்டும் நாளை நெல்சனின் பீஸ்ட் அப்டேட்..இந்த முறையாவது ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ரசிகர்களின் மிகப்பெரிய எதிரிபார்ப்பில் இருக்கும் பீஸ்ட் அப்டேட் நாளை வெளியாகவுள்ளதாக நெல்சன் அறிவித்துள்ளார்.

beast
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
beast
இந்த படத்தின் முதல் அப்டேட்டாக 100 வது நாள் சூட்டிங் போட்டோஸ் வெளியானது. இதையடுத்து முதல் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியானது.டாக்டர் பட மாடலில் வெளியான இந்த ப்ரோமோ சிவகார்த்திகேயன், நெல்சன், அனிரூத் மூவரும் இடம்பெற்றிருந்தனர்.
beast
ப்ரோமோவை அடுத்து வெளியான அரபிக் குத்து பாடல் வைரல் ஹிட் ஆனது..அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள இப்பாடல் வெளியான 33 நாட்களிலேயே யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.இதில் சிறப்பம்சமே சிவகார்த்திகேயன் இப்பாடலுக்கு வரிகள் எழுதி இருந்தது தான்.
beast
ரீல்ஸ்களில் கலக்கி வந்த அரபிக் குத்தை தொடர்ந்து செகண்ட் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியானது. இந்த வீடியோவில் விஜய்,அனிரூத்,நெல்சன் என மூவர் கூட்டணி கலக்கி இருந்தது. பின்னர் அடுத்த ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
beast
பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலாக ஜாலியோ ஜிம்கானா கடந்த 19-ம் தேதி வெளியானது. விஜய் குரலில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு கு.கார்த்திக் வரிகளை எழுதி இருந்தார். அரபிக் குத்து அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெறவில்லை.
beast
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
beast
எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள பீஸ்டில் இருந்து டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் அப்டேட் தருவதாக பதிவிட்டிருந்ததை நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விதமாக வெறும் போட்டோ தான் வெளியானது.
beast
இந்நிலையில் மீண்டும் நாளை அப்டேட் தருவதாக நெல்சன் அறிவித்துள்ளார். இந்த முறையாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நெல்சன் பூர்த்தி செய்வாரா? என நாளை தான் தெரியும்.