பீஸ்ட் டிக்கெட் விலையை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்..ஆயிரங்களில் விற்கப்படுவதாக புகார்..
விஜயின் பீஸ்ட் ஒருநாள் முன்னதாக அமெரிக்காவில் வெளியாவதை முன்னிட்டு அங்கு டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளது.

beast
டாக்டர் பட வெற்றியை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
beast
இந்த படத்தில் விஜயுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
beast
அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா என இரு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்ததை அடுத்து சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது.
beast
ஆக்சன் காட்சிகள் தூள் பறக்கும் காட்சிகளுடன் வெளியான இந்த ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 5 நிமிடத்தில் 1மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களை பெற்றது.
beast
முந்தைய வலிமை ட்ரைலரை தோற்கடித்துள்ளது பீஸ்ட். வலிமை வெளியான 10 நிமிடத்தில் 1மில்லியன் பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
beast trailer
5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய் வீரராகவன் என்னும் பெயரில் நடித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் நாயகனாக விஜய் நடித்துள்ளதாக ட்ரைலர் சொல்கிறது.
beast trailer
இந்த படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாக தயாராகி வருகிறது. இதற்கான டிக்கெட் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
beast ticket
இதில் அமெரிக்காவில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 12 மாலை 3.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் விலையாக 20 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 1510 ரூபாய் ஆகும்.