கல்யாணமே பண்ணாம முரட்டு சிங்கிளாக இருக்கும் திரிஷா... காரணம் இந்த 2 டாப் ஹீரோஸ் தானாம்! பகீர் கிளப்பிய பிரபலம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் என்றால் அது திரிஷாவும், நயன்தாராவும் தான். கடந்த ஆண்டு வரை இவர்கள் இருவரும் சிங்கிளாக இருந்து வந்தனர். கடந்தாண்டு நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இதனால் தற்போது நடிகை திரிஷா மட்டும் தான் முரட்டு சிங்கிள் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை திரிஷாவுக்கு தற்போது வயது 40-ஐ நெருங்கினாலும், அவருக்கான மவுசு குறைந்தபாடில்லை. நடிகை திரிஷா கைவசம் தற்போது பொன்னியின் செல்வன் 2, விஜய்யின் லியோ ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்கள் உள்ளன. இதுதவிர தி ரோடு என்கிற படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர பல்வேறு முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் நடிகை திரிஷாவுக்கு குவிந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... சாகுந்தலம் படத்தின் தோல்வியால் கடும் அப்செட் ஆன சமந்தா... கோபத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாரா..!
இதனால் நடிப்பில் செம்ம பிசியாக இருக்கிறார் திரிஷா. நடிப்பில் அவர் பிசியாக இருந்தாலும் அவர் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்பது தான் அவரிடம் முன்வைக்கப்படும் கேள்வியாக உள்ளது. திரிஷாவும் இதுகுறித்து ஓப்பனாக எந்தவித பதிலையும் இதுவரை அளித்ததில்லை. இந்நிலையில், சினிமா நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களைப் பற்றி யூடியூப்பில் பேசி சர்ச்சைக்குரிய பத்திரிகையாளராகவும் நடிகராகவும் வலம் வரும் பயில்வான் ரங்கநாதன், திரிஷா திருமணம் செய்ய மறுப்பது ஏன் என்பது குறித்து புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நடிகை திரிஷா திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருவதற்கு நடிகர்கள் சிம்புவும், ராணாவும் தான் காரணம் என பயில்வான் கூறி உள்ளார். அவர்கள் இருவரும் திரிஷாவை காதலித்து ஏமாற்றிவிட்டதால் தான் திரிஷாவுக்கு திருமணத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டதாகவும், அதன்காரணமாகவே அவர் 40 வயதை நெருங்கிய நிலையிலும் முரட்டு சிங்கிளாக இருந்து வருவதாக பயில்வான் கொளுத்திப் போட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தலைநகரத்தில் சோழர் படை...! விமானத்தின் முன் பொன்னியின் செல்வன் டீம் நடத்திய மாஸ் போட்டோஷூட் இதோ