'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லையாக மாறப்போவது இவரா..? மீனா கொடுத்த தகவல்..!
First Published Dec 15, 2020, 5:05 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு தனி மதிப்பு உண்டு. சண்டை சச்சரவு, வில்லி, போலீஸ், ஓவர் அழுகை, என இல்லாமல் இருப்பதே இந்த சீரியலின் சிறப்பு.

இந்த சீரியலில் 'முல்லை' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகை விஜே சித்ரா, டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற மிகப்பெரும் கேள்வி ரசிகர்கள் மனதில் உள்ளது.

சமீபத்தில், முல்லை கதாபாத்திரத்தில், நடிகை சரண்யாதான் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதனை சரண்யா மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?