பாலாஜி முருகதாஸ் - ரச்சிதா நடித்த 'ஃபயர்' முதல் நாள் வசூலில் தேறியதா? இல்லையா?
தேசிய விருது பெற்ற திரைப்படங்களை தயாரித்து பிரபலமான ஜே எஸ் கே இயக்குனராக அறிமுகமாகி உள்ள, 'ஃபயர்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜே எஸ் கே இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஃபயர்:
தமிழ் திரையுலகில் ஒரு விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து அதிகம் கவனம் பெற்றவர் ஜே எஸ் கே. இவர் தயாரிப்பில் வெளியான 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். ஜே எஸ் கே இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படம் 'ஃபயர்'.
பாலாஜி முருகதாஸ்:
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், இந்த படத்தின் மூலம் நெகட்டிவ் ரோல் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ரச்சிதா மகாலட்சுமி, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'ஃபயர்' ஆடியன்ஸ் மத்தியில் பத்தி எரிந்ததா? பல்பு வாங்கியதா - ரசிகர்கள் விமர்சனம்!
உண்மை சம்பவம்:
சமீப காலமாக உண்மையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படமும் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, விறுவிறுப்பான திரில்லர் கதைக்களத்தோடு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் 'ஃபயர்'
பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் 'ஃபயர்' திரைப்படம், சென்சார் போர்டின் 'ஏ' சான்றிதழ் பெற்றபோதிலும் கூட, சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களை குவித்தது. பெற்றுள்ளது. சமுதாயத்திற்கு தேவையான துணிச்சலான கருத்துடன் நேற்று வெளியான 'ஃபயர்', திரைப்படம் கண்டிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் என பல ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
Fire படத்தில் Womens Safety பத்தி பேசியிருக்கோம்! உற்சாகத்துடன் பேசிய சாக்ஷி அகர்வால்!
முதல் நாள் வசூல் :
நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 11 படங்கள் வெளியானதால் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகி உள்ளது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 லட்சம் வரை வசூலித்துள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.