- Home
- Cinema
- Visithiran movie : கவுத்திவிட்ட வர்மா.. மீண்டும் ரீமேக் படத்தை நம்பி களமிறங்கும் பாலா - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Visithiran movie : கவுத்திவிட்ட வர்மா.. மீண்டும் ரீமேக் படத்தை நம்பி களமிறங்கும் பாலா - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Visithiran movie Release date : ஆர்.கே.சுரேஷை வைத்து 'விசித்திரன்' என்கிற படத்தை தயாரித்து வருகிறார் பாலா. இந்த படத்திற்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து சுமார் 18 கிலோ வரை எடையை குறைத்து நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் பாலா (Bala). இவர் இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி பி ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
கடைசியாக இயக்குனர் பாலா நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து இயக்கிய 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தெலுங்கு பட ரீமேக் பமான 'வர்மா' (Varma) திரையரங்கில் வெளியாகாத நிலையில், மீண்டும் 'ஆதித்திய வர்மா' என்கிற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். பின்னர் கடந்த ஆண்டு, பாலாவின் 'வர்மா' படம், ஓடிடி தளத்தில் வெளியாகி சில விமர்சனங்களுக்கு ஆளானது.
இதை தொடர்ந்து தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷை வைத்து 'விசித்திரன்' (Visithiran) என்கிற படத்தை தயாரித்து வருகிறார் பாலா. இந்த படத்திற்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து சுமார் 18 கிலோ வரை எடையை குறைத்து நடித்திருக்கிறார். இது மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜோசப் படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடிகைகள் பூர்ணா மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜோசப் (Joseph) படத்தை இயக்கிய பத்மகுமார் தான் விசித்திரன் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இந்நிலையில், விசித்திரன் (Visithiran) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் 20-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இதற்கு முன் பாலா இயக்கிய ரீமேக் படமான வர்மா ஃபிளாப் ஆன நிலையில், தற்போது அவர் மீண்டும் ரீமேக் படத்தையே நம்பி களமிறங்கி உள்ளார். இந்த முறை வெற்றி கிட்டுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... Vetrimaaran : புது BMW பைக்கில் கெத்து போஸ்.... பொல்லாதவனாக மாறிய வெற்றிமாறன் - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்