- Home
- Cinema
- உருவத்தை கிண்டல் செய்த நோகடித்த நெட்டிசன்கள்... 8000 பேரை பிளாக் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!!
உருவத்தை கிண்டல் செய்த நோகடித்த நெட்டிசன்கள்... 8000 பேரை பிளாக் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது வரை பல சீரியல்களில் நடித்து வரும் நேஹா, தன்னுடைய உருவத்தை கிண்டல் செய்த, 8 ஆயிரம் பேரை பிளாக் செய்துள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நேகா, சன் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமான பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது வாணி - ராணி, பாக்கிய லட்சுமி, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியுள்ளதாவது, நான் உயரம் குறைவு தான், கொஞ்சம் Chubby -யாக இருப்பேன். சில சமயங்களில் நானே இவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தது உண்டு.
பின்பு டிசைனர்கள் ட்ரெஸ்ஸிங் மோளம் அதை கட்டுப்படுத்தலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் கற்றுக்கொண்ட உங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். என்னைப்போல இருக்கும் பெண்கள் வெயிஸ்ட் பெல்ட் பயன்படுத்தலாம், இல்லையெனில் நீளமான கோடு போட்ட உடைகளை அணியும்போது, எடை குறைந்தது போலவும், உயரமாக இருப்பது போலவும் தோற்றமளிப்பீர்கள். இந்த விஷயங்களைத்தான் நான் பின்பற்றுகிறேன்.
அப்படி இருந்தும் சில சமயங்களில் இன்ஸ்டாகிராம்-ல் தன்னுடைய உருவத்தை சிலர் கேலி செய்தது உண்டு.
அப்படி போடப்படும் கமெண்டுகள் பார்த, வேதனையுடன் அம்மாவிடம் சொல்வேன். அவர் தான் ஒவ்வொரு முறையும் என்னை சமாதானம் செய்வார்.
எனக்கு இன்ஸ்டாகிராமில் வரும் நெகட்டிவ் கமெண்ட்டுகளின் கணக்கை பிளாக் செய்துவிடுவேன். இதுவரை 8 ஆயிரம் கணக்குகளை பிளாக் செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.