ரஜினிகாந்தை போல்.. ராணாவுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைநடந்துள்ளதா? கண் பார்வை பாதிப்பு! இளம் வயதில் இரு ஆபரேஷன்
நடிகர் ராணா டகுபதி, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இரு பெரிய அறுவை சிகிச்சைகள் குறித்து சமீபத்தில், தனியார் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
பாகுபலி திரைபடத்தில், பிரபாஸுக்கு நிகராக பாராட்ட பட்ட பிரபலம் ராணா டகுபதி. தெலுங்கு நடிகராக இருந்தாலும், பாகுபலி படத்திற்கு முன்பே இவருடைய முகம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம். இதற்க்கு முக்கிய காரணம், இவர் அஜித்துடன் இணைந்து, அவரின் நண்பனாக 'ஆரம்பம்' படத்தில் நடித்து அமர்க்கள படுத்தினார்.
இதை தொடர்ந்து, ஜீரோ சைஸ், காடன், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர், நெட்பிளிக்சில் நடித்துள்ள 'ராணா நாயுடு' என்கிற வெப் சீரிஸில் தன்னுடைய நிஜ மாமா, வெங்கடேஷுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வெப் தொடர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த வெப் தொடரின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கொடுத்த பேட்டி ஒன்றில், தான் கடந்து வந்த உடல்நல பிரச்சனைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகர் ராணாவுக்கு சிறு வயதிலேயே கண்களில் கார்னியல் ட்ரான்ஸ்ப்ரெண்ட்டெண்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர. சில வருடங்களுக்கு முன் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள பட்டது. இதனைமேற்கொண்ட பின்னர் நான் ஒரு 'டெர்மினேட்டர்' போல் உணர்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் வந்தாலே பலர், மனம் தளர்ந்து போவது உண்டு, ஆனால் கடுமையான உடல்நல பிரச்சனை மற்றும், இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளதை தன்னுடைய தைரியத்தால் தான் எதிர்கொண்டதாகவும், தெரிவித்துள்ளார் ராணா.
சமந்தாவின் அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் கலந்து கொண்ட போது , ராணா... தனக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்ட போது, திடீர் என பிபி அதிகரித்து, இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு, சிறுநீரகமும் செயல் இழந்தது. எனவே பக்கவாதம், ரத்தக்கசிவு ஏற்பட 70 சதவீத வாய்ப்புள்ளதாகவும் , இறந்து போவதற்கு 30 சதவீத வாய்ப்பும் உண்டு என மருத்துவர்கள் கூறியதாக கூறி அதிரவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.