- Home
- Cinema
- பிரமாண்ட நாயகன் ராஜமௌலியின் படை தளபதி யார் தெரியுமா?..காவிய வடிவமைப்புக்கு சொந்தக்கார கலை இயக்குனர்..
பிரமாண்ட நாயகன் ராஜமௌலியின் படை தளபதி யார் தெரியுமா?..காவிய வடிவமைப்புக்கு சொந்தக்கார கலை இயக்குனர்..
பாகுபலி, ஆர் ஆர் ஆர் என ராஜமௌலியின் வெற்றி பிரம்மாண்டங்களுக்கு துணை நின்ற தேசிய விருது வென்ற கலை இயக்குனர் குறித்து பார்ப்போம்..

Baahubali
மிரள வைத்த பாகுபலி செட் :
பாகுபலி படம் உலகறிந்த ஒன்றாகும். வசூலிலும் சளைக்காத சாதனை படைத்த இந்திய படம் என்றால் அது பாகுபலி தான். ராஜமௌலியின் பிரம்மாண்டத்திற்கு பேர் எடுத்து கொடுத்த பாகுபலியின் சிறப்பம்சமே மிரள வைக்கும் வடிவமைப்பு தான். பிரமிக்க வைக்கும் கோட்டையில் இருந்து சிலைகள் வரை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
SAAHOO
பிரபாஸின் சாஹோ :
பாகுபலி வெற்றியை அடுத்து பிரபாஸுன் அடுத்த ஹிட் ஆன சாஹோவில் பைக் ஸ்டண்டுகள் நிறைந்திருக்கும். இதற்காக பிரமாண்ட கலை வடிவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் செய்திகளுக்கு.. RRR movie : ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை அடிச்சுதூக்கி கெத்து காட்டும் ‘ஆர்.ஆர்.ஆர்’
RRR Movie
RRR சாதனைகள் :
இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சமீபத்திய சாதனையாக ஆர் ஆர் ஆர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது. உலகமுழுவதும் வெளியான இந்த படம் மூன்றே நாட்களில் 500 கோடியை வசூல் செய்துள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நாயகர்களாக கலக்கி உள்ள இந்த படம் பாகுபலி வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
RRR Movie
சண்டை காட்சியின் தத்ரூபம்:
பாகுபலியை அடுத்து உருவாகியுள்ள வரலாற்று சுவடு சார்ந்த இந்த கதைக்களம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக கொண்டது. அங்கேலேயே ஆட்சியின் பிரம்மாண்டங்களை கண் எதிரே கொண்டு வந்தது இந்த ஆர்ஆர்ஆர். உயர்ந்தெழுந்த மாளிகை, சண்டை காட்சியின் தத்ரூபம் என இதிலும் கலை வடிவம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Sabu Cyril
பிரமாண்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர் :
முன்னதாக பிரமாண்ட படைப்புகளும் அதன் இயக்குனர்கள் குறித்தும் பார்த்தோம். இவை பலரும் அறிந்த விஷயமே. உண்மையில் பெரிய படைப்புகள் வெற்றி பெரும் பட்ஷத்தில் அதன் இயக்குனரும், நாயகர்கள் குறித்து மட்டுமே பெரிதாக பேசப்படுகிறது. ஆனால் அந்த படைப்புகளின் பின்னணியில் இருக்கும் கலை இயக்குனர்கள், நடன இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்றோர் குறித்து பெரிதாக பேசப்படுவதில்லை.
Sabu Cyril
சினிமாவின் முதுகெலும்புகள் :
பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பிரமாண்ட கதைகளை கண்முன் நிறுத்துவது அப்படங்களில் தத்துரூபா கலை வடிவங்களே இந்த ஆர்ட்டுகளுக்கு மூளையாக இருந்த இயக்குனர் குறித்து தான் பார்க்க போகிறோம். தமிழில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் கலை இயக்குனர் சாபு சிரில் தான் அவர்.
Sabu Cyril
ஒரே நேரத்தில் பல படிப்புகள் :
தேசியத் திரைப்பட விருது 4 முறையும் சிறந்த கலை இயக்கத்துக்காக பிலிம்பேர் விருது 5 முறையும் பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் சுழன்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான மரைக்காயர், பாகுபலி வெப் சீரிஸ், ஆர் ஆர் ஆர் என மூன்று படைப்புகளை ஒரே நேரத்தில் கையாண்டுள்ளார்.
Sabu Cyril
முன்னணி கலை இயக்குனர்களை உருவாக்கி சாபு :
பிரமாண்ட காலை இயக்குனராக வலம் வரும் இவரிடம் துணை இணயக்குனர்களாக இருந்த சுனில் பாபு, செல்வா, மனோஜ், வீர சம்மர், லால் குடி இளையராஜா, சுரேஷ் செல்வராஜ், ஆறுசாமி, சீனு, முத்துராஜ், மிலன் உள்ளிட்டோர் கோடம்பாக்கத்தை கலக்கி வருகின்றனர். அதோடு இவரின் மகள் ஸ்வேதா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..RRR movie day 3: படத்தின் மொத்த செலவை மூன்றே நாளில் வசூல் செய்த 'ஆர்ஆர்ஆர்' படம்..! எத்தனை கோடி தெரியுமா..?
Sabu Cyril
பேசும் பொருளான கலை வடிவம் :
பாகுபலியை அடுத்து ஆர் ஆர் ஆர் -ல் தனது பிரமாண்ட சிந்தனைகளை அள்ளித்தெளித்துள்ள சாபு சிரில். கதை கருவை மட்டுமே காதில் வாங்கிக்கொண்டு அதற்கான கலைவடிவத்தை தீட்டுவதில் வல்லவர் என பெயர் எடுத்தவர். பிரமிப்பை உண்டாக்கிய இந்த கலை சிகரத்தை ஆர் ஆர் ஆர் வெற்றி கொண்டாட்டம் பேச வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.