‘சூப்பர் டா தம்பி’... தனுஷை வாழ்த்திய அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள்... எதற்காக தெரியுமா?
‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு தனுஷ் தற்போது நடித்து வரும் தி கிரே மேன் ஹாலிவுட் பட இயக்குநர்கள் வாழ்த்து கூறியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று 190 நாடுகளில் 17 மொழிகளில் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளம் மூலம் வெளியாகிறது. கர்ணன் படத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு தனுஷ் தற்போது நடித்து வரும் தி கிரே மேன் ஹாலிவுட் பட இயக்குநர்கள் வாழ்த்து கூறியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட்டில் மட்டுமல்லாது உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த, வசூல் ரீதியாக மாஸ் காட்டிய அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கியவர்கள் ருசோ சகோதரர்கள். இவர்களுடைய இயக்கத்தில் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போது அவருடைய ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அப்படியிருக்க தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்திற்கு ருசோ சகோதர்கள் வாழ்த்து கூறியிருப்பது வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது.
ருசோ சகோதரர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் டா தம்பி! உன்னுடன் பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சி. ஜகமே தந்திரம் படத்திற்கு ‘குட் லக்’ என பதிவிட்டதோடு, ஜகமே தந்திரம் டிரெய்லரையும் இணைத்து படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களின் ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், உங்கள் இயக்கத்தில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்றும் பதிவிட்டுள்ளார்.