கூலி, வார் 2வை ஓரம்கட்டிய மகாவதார் நரசிம்மா.. ஷாக் கொடுத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ஆகஸ்ட் மாத பாக்ஸ் ஆபிஸில் கூலி, வார் 2 மற்றும் மகாவதார் நரசிம்மா ஆகிய படங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆச்சரியப்படும் விதமாக, மகாவதார் நரசிம்மா உலகளவில் ரூ. 286.7 கோடி வசூலித்து முன்னணியில் உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ஆகஸ்ட் மாத பாக்ஸ் ஆபிஸ் இன்னும் சூடாகிக் கொண்டே செல்கிறது என்றே கூறலாம். ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த வார் 2 இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதேவேளை, பிரசாந்த் வர்மா இயக்கிய மகாவதார் நரசிம்மா மற்றும் ஜெ. பி. துமிநாத் இயக்கிய சு ஃப்ரம் சோ ஆகிய படங்கள் தனித்த பாதையில் வெற்றியைக் கண்டுள்ளன.
கூலி பாக்ஸ் ஆபிஸ்
ரஜினிகாந்தின் கூலி படம் திரையரங்குகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ரசிகர்கள் அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவு காரணமாக, படம் முதல் நாளிலேயே வலுவாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய தகவலின்படி, படத்தின் மொத்த வசூல் ரூ. 245.50 கோடியாக உயர்ந்துள்ளது. இரண்டாவது சனிக்கிழமையன்று மட்டும் ரூ. 10 கோடி வசூல் செய்து, இன்னும் வேகம் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வார் 2 பாக்ஸ் ஆபிஸ்
பெரிய தயாரிப்பு நிறுவனம், ஸ்பை யூனிவர்ஸ் கதை, பிரபல நடிகர்கள் என பல காரணங்கள் இருந்தாலும் வார் 2 எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. வெளியான பத்து நாட்களில், படம் மொத்தம் ரூ. 214.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. பத்து நாட்களில் சுமார் ரூ. 6.25 கோடி தான் வசூல் செய்தது என தகவல் வெளியாகி உள்ளது.
மகாவதார் நரசிம்மா வசூல்
தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்திய படம் மகாவதார் நரசிம்மா. ஆரம்பத்தில் மிகச் சிறிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும், மக்களின் பாராட்டுகள் காரணமாக படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் மட்டும் ரூ. 225.4 கோடி வசூல் செய்துள்ளது.
வசூல் நிலவரம்
இந்திய வசூலுடன் சேர்த்து, வெளிநாட்டு வசூலையும் இணைத்தால், மொத்த உலகளாவிய வசூல் ரூ. 286.7 கோடியாக உயர்ந்துள்ளது. வார் 2 மற்றும் கூலி போன்ற பிரம்மாண்ட படங்களின் போட்டியிலும், மகாவதார் நரசிம்மா தனது தனித்துவத்தால் ரசிகர்களை கவர்ந்து, வசூலில் முன்னிலை வகிக்கிறது.