Coolie Kokki Lyric Video Song Released : ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம் பெற்றுள்ள கொக்கி பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Coolie Kokki Lyric Video Song Released : லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் காம்பினெஷனில் முதல் முறையாக திரைக்கு வந்த படம் தான் கூலி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாக உருவான கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான் (சிறப்பு தோற்றம்), சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான், மோனிஷா பிளெஸி, பூஜா ஹெக்டே (சிறப்பு தோற்றம்) என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

கூலி படம் கடந்த 14 ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் வசூலில் மட்டும் எந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளவில்லை. படம் வெளியானது முதல் அதிக வசூல் குவித்து வருகிறது. அதோடு முதல் நாளில் மட்டும் இந்தப் படம் ரூ.151 கோடி வசூல் குவித்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெளியாகி இன்றுடன் 8 நாட்கள் ஆன நிலையில் கூலி படம் இந்தியளவில் மட்டும் ரு.220 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது என்றும் உலகளவில் ரூ.400 கோடிகும் அதிகமாக வசூல் குவித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் படத்தில் இடம் பெற்றுள்ள கொக்கி பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலில் ரஜினிகாந்த் மற்றும் உபேந்திரா இருவரும் இணைந்து சண்டைக் காட்சிகளில் பங்கேற்றனர். அப்போது பாடப்படும் பாடலாக இந்த கொக்கி பாடல் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களை அதிகளவில் ஈர்த்த பாடலாக மோனிகா பாடலுக்கு பிறகு இந்தப் பாடல் கருதப்படுகிறது.

Kokki - Lyric video | Coolie | Superstar Rajinikanth | Upendra | Lokesh | Anirudh | Sun Pictures