பல வண்ண நீச்சல் உடை..கதிகலங்க வைக்கும் தனுஷ் பட நடிகை!
தனுஷ் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் படத்தின் நாயகி சாரா அலி கான் பல வண்ண பிகினி அணிந்து ஒரு குளத்தில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

sara ali khan
அத்ராங்கி ரே என்னும் பாலிவுட் படத்தில் தனுஷ், அக்ஷய் குமார் இருவரும் நாயகியாகவும், சாரா அலிகான் நாயகியாகவும் நடித்திருந்தார். முக்கோண காதல் கதையான இந்த படம் கடந்த 2021 தமிழ், இந்தி உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் வெளியானது. தமிழில் இந்த படம் கலாட்டா கல்யாணம் என்னும் பெயரில் வெளியானது.
sara ali khan
ஆனந்த் எல். ராய் இயக்கியத்தில் உருவான இந்த படத்தை டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் ,கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேஜிக் மேனாக வரும் அக்ஷய் குமாரை காதலிக்கும் நாயகியை தமிழக இளைங்கராக வரும் விசுவிற்கு (தனுஷ்) வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறார். இதையடுத்து நாயகி கணவனுடன் வாழ்வாரா அல்லது காதலனை தேடி செல்வாரா என்பதே படத்தின் மீதிக்கதையாக இருந்தது.
sara ali khan
கடந்த ஆண்டு டிசம்பரில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிஓடி தளத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாலிவுட்டில் தனுஷுக்கும் , நம்ம ஊரில் நாயகி சாரா அலிகானுக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 2018 ஆம் ஆண்டு கேதார்நாத் மற்றும் சிம்பா ஆகிய படங்களின் மூலம்தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய சாரா. தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
Sara Ali Khan
2019 கணக்கெடுப்பின்படி இந்திய பிரபலங்கள் பட்டியலில் 100 பேரில் ஒருவராக இருந்தார் சாரா. இவர் அறிமுகமான முதல் இரண்டு படங்களும் வணிகரீதியாக வெற்றியடைந்ததோடு அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத்தந்தது. தற்போது விக்ராந்த் மாஸியுடன் பவன் கிரிபலானியின் கேஸ்லைட் படத்தில் பணிபுரிந்து வருகிறார்.
sara ali khan
சமீபத்தில் அவர் ஒரு வசதியான நீச்சலுடை புகைப்படத்தை வெளியிட்டு தலையை சுற்ற வைத்துள்ளார். படத்தில், நடிகை பல வண்ண பிகினி அணிந்து ஒரு குளத்தில் ரசிக்கும் வண்ணம் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடுகிறார்கள், மேலும் அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.