அல்லு அர்ஜுன் படத்துக்காக அட்லீ பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள பிரம்மாண்டமான பான் இந்தியா படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Atlee - Allu Arjun Movie Title Leaked
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் ராஜா ராணி படம் மூலம் அறிமுகமாகி அடுத்ததாக விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கானை வைத்த் ஜவான் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீ செம டிமாண்ட் உண்டானது.
ஹாலிவுட் தரத்தில் உருவாகும் அட்லீ படம்
அட்லீயின் கால்ஷீட்டுக்காக பாலிவுட் நடிகர்கள் க்யூவில் நிற்கும் நிலையில், அவர் தன்னுடைய அடுத்த படம் அல்லு அர்ஜுனுடன் என அறிவித்தார். அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது ஒரு டைம் டிராவல் படம் என்பதால் இதற்காக ஹாலிவுட் டெக்னீஷியன்களுடன் பணியாற்ற முடிவு செய்துள்ளார் அட்லீ. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அதில் அனிமேஷன் கதாபாத்திரமும் ஒன்றாம். அதற்காக உலகத் தரம் வாய்ந்த விஎஃப்எக்ஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் அட்லீ.
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்துக்கு 700 கோடி பட்ஜெட்
அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் சுமார் 700 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதில் ஹீரோவாக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ரூ.300 கோடியும், அட்லீக்கு ரூ.100 கோடியும் சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறது சன் பிக்சர்ஸ். இதில் மொத்தம் ஐந்து ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்களாம். தற்போதைய நிலவரப்படி ஜான்வி கபூர், பாக்கியஸ்ரீ போர்ஸ், தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. மற்றொரு நாயகி வெளிநாட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அட்லீ - அல்லு அர்ஜுன் பட டைட்டில் இதுவா?
இந்நிலையில், அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு ‘ஐகான்’ என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுனை ஐகான் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். அதனால் ரசிகர்களிடம் ஈஸியாக கனெக்ட் ஆக வேண்டும் என்பதற்காக அப்பெயரை வைத்துள்ளார்களா இல்லை இது பான் வேர்ல்டு படமாக உருவாகி வருவதால் உலகளவில் வெளியிட இது கரெக்ட் ஆன டைட்டிலாக இருக்கும் என முடிவெடுத்து வைத்தார்களா என்பது பின்னர் தான் தெரியவரும்.