அஷ்வினின் ஆணவப் பேச்சால் வந்த வினை... டிஆர்பி-யில் மரண அடி வாங்கிய ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம்
Enna Solla pogirai : என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஷ்வின் பேசிய பேச்சைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பாப்புலர் ஆனவர் அஷ்வின் குமார். அந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் மிகவும் அதிகம். அந்த அளவுக்கு பிரபலமான இவருக்கு அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் பட வாய்ப்புகளும் கிடைத்தன.
அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன சொல்ல போகிறாய். ஹரிஹரன் என்பவர் இயக்கி இருந்த இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக தேஜு அஷ்வினி மற்றும் அவந்திகா மிஷ்ரா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் குக் வித் கோமாளி புகழும் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் வெளியான இப்படம் தோல்வியை தழுவியது.
இதற்கு முக்கியக் காரணம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஷ்வின் பேசிய பேச்சு தான். அதில் தான் 40 கதைகளுக்கு மேல் கேட்டு தூங்கியதாக அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. இந்த பேச்சின் மூலம் கடும் வெறுப்பை சம்பாதித்தார் அஷ்வின். இதற்காக அவர் மன்னிப்பு கேட்ட போதிலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தப் படம் கடந்த வாரம் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் இப்படம் மரண அடி வாங்கி உள்ளது. இப்படம் 0.99 டிஆர்பியை மட்டுமே பெற்றது. இப்படத்துக்கு போட்டியாக ஒளிபரப்பப்பட்ட ஆதியின் அன்பறிவு திரைப்படம் 2.69 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அஷ்வினின் ஆணவப் பேச்சை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... Geetha Krishna : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்... பிரபல இயக்குனரின் பேச்சால் வெடித்த சர்ச்சை