MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் AGS, அஸ்வத், பிரதீப் காம்போவில் புதிய படம் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் AGS, அஸ்வத், பிரதீப் காம்போவில் புதிய படம் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

AGS, Ashwath Marimuthu and Pradeep Ranganathan Combination : டிராகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் காம்பினேஷனில் புதிய படம் வரும் என்று டிராகன் இயக்குநர் அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Feb 23 2025, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

AGS, Ashwath Marimuthu and Pradeep Ranganathan Combination : டிராகன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிக்கும் நிலையில் மீண்டும் ஏஜிஎஸ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோரது காம்பினேஷனில் புதிய படம் வரும் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கயாடு லோகர் ஆகியோர் பலரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் தான் டிராகன்.

27
மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் தனது காதலை வெளிப்படுத்தும் போது அந்த பெண் தனக்கு நன்றாக படிக்கும் பையனை விட ரௌடித்தனம் செய்யக் கூடிய பையனைத் தான் பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறாள். இதனால் கல்லூரிக்கு சென்று கடி அடிப்பது, ரௌடித்தனம் செய்வது, மோசமாக படிப்பது என்று எல்லா வேலையும் செய்து கடைசியில் 48 அரீயர் வைக்கும் நிலைக்கு வருகிறார் ஹீரோ.

37
மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த ஹீரோவை ஹீரோயினும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார். கல்லூரி முடிந்த பிறகு எந்த வேலைக்கும் போகாத ஹீரோ வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் பெற்றோரை ஏமாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் தன்னை உயிருக்கு உயிராக காதலித்த ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் ரூ.1,20,000 சம்பளம் வாங்கும் வேறொரு பையனை திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வருகிறார்.

47
மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

இதனால், ஏமாற்றம் அடைந்த பிரதீப் ரூ.1,20,001 சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்காக டிகிரி முடித்தது போன்று அந்த 48 அரியரையும் எழுதி பாஸ் செய்தது போன்று போலி சான்றிதழ் பெற்று ஒரு கம்பெனியில் வேலைக்கு சேருகிறார். அந்த கம்பெனி அவருக்கு ரூ.1,30,000 சம்பளம் கொடுக்கிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை மாறுகிறது. கயாடு லோகருடன் திருமண நிச்சயதார்த்தமும் முடிகிறது. அப்போது தான் எதிர்பாராத விதமாக கல்லூர் முதல்வர் பிரதீப் ரங்கநாதனை சந்தித்து அவரது கம்பெனிக்கு வருகிறார்.

57
மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

இதையடுத்து உண்மையாக அவர் அந்த 48 பேப்பரையும் எழுதி முடித்தாரா? அதே கம்பெனியில் மீண்டும் வேலை கிடைத்ததா? கயாடு லோஹருடன் திருமணம் நடந்ததா என்பது தான் டிராகன் படத்தோட மீதி கதை. படம் வெளியானது முதல் எந்தவித குறையும் இல்லாமல் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு படத்தின் கதையும் காட்சிகளும் அமைந்திருக்கிறது. ஆனால், என்ன, தவறான முறையில் போலி சான்றிதழ் பெற்று அதன் மூலமாக அவர் சந்திக்க கூடிய பிரச்சனைகளை நேர்மறையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

67
மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

உலகம் முழுவதும் வெளியான டிராகன் படம் முதல் நாளில் ரூ.11.2 கோடி வசூல் குவித்துள்ளது. வளர்ந்து வரும் புதுமுக ஹீரோவின் படம் இத்தனை கோடி குவிப்பது என்பது இதுவே முதல் முறை. இது அவருடைய 2ஆவது படம். லவ் டுடே படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் திரைக்கு வந்து பல சாதனைகளை படைத்தது. இதே போன்று தான் டிராகன் படமும் வித்தியாசமான கதையுடன் திரைக்கு வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.

77
மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

மீண்டும் அஸ்வத், பிரதீப் காம்போ வரும் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

முதல் நாளில் ரூ.11.2 கோடி வசூல் குவித்த நிலையில் 2ஆவது நாளான நேற்று இந்தப் படம் உலகளவில் ரூ.15.4 கோடி வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.10.25 கோடி வசூல் குவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.26.6 கோடி வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் ரூ.16 கோடி வசூல் குவித்துள்ளது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ், பிரதீப் ரங்கநாதன் காம்பினேஷனில் இன்னும் 3 வருடத்திற்குள் புதிய படம் வரும் டிராகன் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதே போன்று தான் ஏஜிஎஸ் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தியும் பிரதீப் ரங்கநாதனுக்காக எப்போதும் ஏஜிஎஸ் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அனுபமா பரமேஸ்வரன்
டிராகன்
கயாடு லோஹர்
பிரதீப் ரங்கநாதன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved