- Home
- Cinema
- செம ரொமாண்டிக்கா கிறிஸ்துமஸ் கொண்டாடிய அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்.. க்யூட் போட்டோஸ்..
செம ரொமாண்டிக்கா கிறிஸ்துமஸ் கொண்டாடிய அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்.. க்யூட் போட்டோஸ்..
தங்களின் அழகான ரொமாண்ட்டிக் புகைப்படங்களுடன் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் 3-வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். பாலே, சால்சா நடனக் கலைஞராக இருந்த கீர்த்தி பாண்டியனுக்கு, பின்னர் 2015 அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது.. எனினும் தனது நிறம் மற்றும் எடை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் திரைத்துறையில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும் விடாமுயற்சியுடன் முயற்சி வந்த அவர் 2019 ஆம் ஆண்டு தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். ஹரிஷ் ராம் இயக்கிய இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
பின்னர் ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவான அன்பிர்கிணியாள் படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பலதரப்பினரால் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதை கீர்த்தி பாண்டியன் வென்றார்.
மேலும் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற மினி சிரீஸில் நடித்தார். அவர் தற்போது கொஞ்சம் பேசினால் என்ன, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது நடிகர் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம், திருமணத்திற்கு பிந்தைய போட்டோஷூட் என பல புகைப்படங்களை இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் கீர்த்தி பாண்டியன் நிறம், தோற்றம் தொடர்பாக பல நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் அதற்கு இருவருமே கண்ணியத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர். . சமீபத்தில் கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படமும், அசோக் செல்வனின் சபாநாயகன் படமும் அடுத்தடுத்து வெளியானது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தங்களின் அழகான ரொமாண்ட்டிக் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.