MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடிதூள்... ஆஸ்கர் ரேஸில் ஆதிக்கம் செலுத்தும் ஆர்.ஆர்.ஆர். பட நாயகர்கள் - வெரைட்டி வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

அடிதூள்... ஆஸ்கர் ரேஸில் ஆதிக்கம் செலுத்தும் ஆர்.ஆர்.ஆர். பட நாயகர்கள் - வெரைட்டி வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

Ramcharan : வெரைட்டி பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹீரோவாக நடித்த ராம்சரணுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். 

1 Min read
Author : Ganesh A
Published : Sep 16 2022, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ராஜமவுலி இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம்பீன் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி இருந்தார் ராஜமவுலி. இதில் கொமரம்பீமாக ஜூனியர் என்.டி.ஆரும், சீதாராம ராஜுவாக ராம்சரணும் நடித்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் என்பதால், இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே சண்டை வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு படத்தில் இருவருக்கும் சரியான அளவு காட்சிகளைக் கொடுத்து திருப்திபடுத்தி இருந்தார் ராஜமவுலி.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் ரேஸில் ஜூனியர் என்.டி.ஆர்.... ராஜமவுலிக்கும் வாய்ப்பு இருக்குதாம் - வெளியான சூப்பர் தகவல்

34

பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து அதகளப்படுத்திய இப்படத்தை உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த இயக்குனர்களும், நடிகர்களும் பார்த்து பாராட்டி இருந்தனர். அதுமட்டுமின்றி இப்படம் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. பிரபல ஹாலிவுட் பத்திரிகையான வெரைட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் விருதுகிடைக்க வாய்ப்புள்ள நடிகர், நடிகைகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜூனியர் என்.டி.ஆரும், சிறந்த இயக்குனருக்கான விருதை ராஜமவுலியும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

44

இந்நிலையில், தற்போது அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹீரோவாக நடித்த ராம்சரணுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெறும் நட்பு பாடலுக்கும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறும் பல்வேறு பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர். படம் இடம்பெற்று உள்ளதால் நிச்சயம் ஒரு ஆஸ்கர் விருதையாவது வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சோசியல் மீடியாவில் டிரெண்டான பொன்னியின் செல்வன் சேலைகள்... விற்பனைக்கு திடீர் தடை விதிப்பு - காரணம் இதுதான்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜூனியர் என்டிஆர்
ராஜமௌலி
ராம் சரண்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!
Recommended image2
Theatre and OTT Releases : நூறு சாமி முதல் எங்கள் தங்கம் வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved