அழகு தேவதை சாயிஷாவின் தந்தையை பார்த்திருக்கீங்களா..? பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு!
பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா தந்தை மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்து கொண்ட, அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
நடிகை சாயிஷா, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுமீத் சைகலின் மகள்.
தெலுங்கு சினிமாவில் “அகில்“ என்ற படம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக “வனமகன்” படம் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார்.
கார்த்தி உடன் “கடைக்குட்டி சிங்கம்”, விஜய் சேதுபதி உடன் “ஜுங்கா” போன்ற படங்களில் நடித்தார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக “கஜினிகாந்த்” படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு குடும்பம், கணவர், குழந்தைகள் என்று செட்டில் ஆவார் என நினைத்தால், முன்பை விட இப்போது தான் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.
காரணம் திருமணத்திற்கு பிறகும் அம்மணி தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவது தான் காரணம்.
சமீபத்தில், சாயிஷா தன்னுடைய கணவருக்கு ஜோடியாக நடித்த, 'டெடி' திரைப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவருடைய குழந்தை பருவ புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் உள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்துள்ளது.
அம்மாவுடன் அழகு தேவதையாக மிளிரும் சாயிஷா
அம்மாவுடன் அழகு தேவதையாக மிளிரும் சாயிஷா
தன்னுடைய தாத்தாவும், பழப்பெறும் நடிகருமான திலீப்புடன் சிறிய வயதில் சாயிஷா
ஒட்டு மொத்த குடும்பத்துடன் சயீஷா எடுத்து கொண்ட ரேர் புகைப்படம்