நயன்தாரா, ஆர்யா Wedding Cards ஆன்லைனில் வைரலான கதை தெரியுமா?
Arya Nayanthara Wedding Invitation Leaked Online During Raja Rani Movie : நயன்தாரா மற்றும் ஆர்யா இருவரும் காதலிப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவர்களது திருமண அழைப்பிதலும் ஆன்லைனில் வெளியாகி பூகம்பமாக வெடித்தது.
Arya Nayanthara Wedding Invitation Online Leaked During Raja Rani Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தில் கிராமத்து ஹோம்லி லுக்கில் அறிமுகமான நயன் தாரா அதன் பிறகு கிளாமர் குயீனாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். தொடர்ந்து ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில் தனது திறமையான நடிப்பால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து ஹிட் மேல் ஹிட் கொடுத்து இன்று உலகமே கொண்டாடும் ஒரு நடிகையாக புகழின் உச்சத்தை எட்டியுள்ளார்.
Nayanthara Arya Marriage Invitation, Boss Engira Bhaskaran
தமிழ் சினிமாவில் இல்லை இல்லை இந்தியாவிலேயே அதிகளவில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலிப்பதாக கூறிய நிலையில் கடைசியில் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் என்று 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலமாக நயன்தாரா மற்றும் ஆர்யா இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக அப்போது பேசப்பட்டது.
Arya Nayanthara Wedding Invitation Online Leaked During Raja Rani Movie
ஆர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் ஆக்ஷன் காட்சிகளை தேர்வு செய்து நடித்து வந்த ஆர்யா அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்தார். அப்படி அவர் நடித்து ஹிட் கொடுத்த படங்களின் பட்டியலில் நான் கடவுள், மதராசபட்டினம், வேட்டை, ராஜா ராணி ஆகிய படங்கள் ரொம்பவே முக்கியமானவை. பிரபுதேவா உடனான காதல் முறிவுக்கு பிறகு அப்செட்டில் இருந்த நயன்தாராவிற்கு ஆர்யாவின் நட்பு ஆதரவை கொடுத்துள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படன் மூலமாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
Arya Filmography, Arya Upcoming Movies, Nayanthara Upcoming Movies
ஒரு கட்டத்தில் நயன்தாரா மீதான தனது விருப்பத்தை ஆர்யா வெளிப்படுத்தினார். அதில், நயன்தாரா ரொம்பவே ஸ்பெஷல் என்றும், தனக்கு பிடித்த ஹீரோயின் என்றும் ஆர்யா கூறினார். ஆர்யா தனது வீட்டு விசேஷத்திற்கு நயன்தாராவை அழைத்த போது அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் தான் 2017 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் ஆர்யா இருவருக்கும் இடையிலான திருமண அழைப்பிதல் ஆன்லைனில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அந்த அழைப்பிதல் இருவரும் இணைந்து நடித்த ராஜா ராணி படத்துக்கான விளம்பரம் என்று பின்னர் தெரியவந்தது.
Arya, Nayanthara, Raja Rani Movie, Atlee
இதையடுத்து 2018 ஆம் ஆண்டு கஜினிகாந்த் படம் மூலமாக ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆர்யா மற்றும் சாயிஷா இருவருக்கும் இடையில் 17 வயது வித்தியாசம். இது அவர்களது திருமணத்தின் போது சலசலப்பை ஏற்படுத்தியது.தற்போது ஆர்யா நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. நேற்று வெளியான மதகஜராஜா படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஆர்யா நடிப்பில் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.