ஆர்யாவின் கேப்டனிலிருந்து வெளியான புதிய தகவல்..என்ன விஷயம் தெரியுமா?
மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட உயிரினம் வனப்பகுதியில் இருந்தால் எப்படி இருக்கும் என சித்தரித்து மிரட்டி இருந்தது.
captain
தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஆர்யா. தற்போது இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கேப்டன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் முன்னதாக டெடி படம் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தது.
ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கேப்டன்' திரைப்படம் செப்டம்பர் 8, 2022 அன்று திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...விஜயின் செல்ல பிராணியை முடிவு செய்த தளபதி 67 டீம்..படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
captain
டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அறிவியல் புனைகதை திரில்லர் படமான இது வேற்றுகிரகவாசிகளுடன் சண்டையிட நியமிக்கப்பட்ட ராணுவ அதிகாரியின் பயணத்தை விவரிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.. இந்திய ராணுவ கேப்டன் வெற்றிசெல்வனாக ஆர்யா நடிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலாத்கார மிரட்டல்களை சந்தித்தேன்..பரபரப்பை கிளப்பிய பிரபலம்
captain
இந்த படத்திற்காக வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளுக்கு படையெடுத்த படக்குழு முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கியுள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட உயிரினம் வனப்பகுதியில் இருந்தால் எப்படி இருக்கும் என சித்தரித்து மிரட்டி இருந்தது. இந்நிலையில் இந்தப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...விஜய் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன விஜய் மக்கள் இயக்கம்