MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • முதல் நாளே இத்தனை கோடியா..! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அருண் விஜய்யின் ‘யானை’

முதல் நாளே இத்தனை கோடியா..! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அருண் விஜய்யின் ‘யானை’

Yaanai BoxOffice collection Day 1 : உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 02 2022, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் கூடிய கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஹரி. கடைசியாக இவர் இயக்கிய படங்கள் சரிவர ஓடாததால், கடந்த 4 ஆண்டுகளாக இவர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீசாகவில்லை. இதையடுத்து தான் அருண் விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி சேர்ந்தார் இயக்குனர் ஹரி.

இதையும் படியுங்கள்... ஜெய் பீம் எங்களோட கதை... திருடி படமா எடுத்துட்டாங்க..! சூர்யா மீது கதை திருட்டு வழக்கு - ரசிகர்கள் அதிர்ச்சி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இவர்கள் கூட்டணியில் யானை திரைப்படம் உருவானது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, ராதிகா, சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், அம்மு அபிராமி, யோகிபாபு, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... ‘காஃபி வித் காதல்’ படத்துக்காக இளையராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன் - வைரலாகும் வீடியோ

34

இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் ரிலீசானது. யானை படம் எனகு என்கிற பெயரில் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது. வெளியான முதல் நாளே இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... காதல் மனைவி நயன்தாரா உடன் காத்துவாக்குல ரொமான்ஸ் பண்ணும் விக்னேஷ் சிவன் - வைரலாகும் போட்டோஸ்

44

இந்நிலையில், யானை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.4.5 கோடி வசூலித்துள்ளதாம். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 3.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அருண் விஜய்யின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக யானை மாறி உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அருண் விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended image2
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved