அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தப்பிக்க... தடுப்பூசி போட்டுக்கொண்ட இரு முக்கிய பிரபலங்கள்!
90 களில், அஜித், விஜய் ,உள்பட பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை சிம்ரன் தற்போது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அறிவித்து, இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதையும் கொரோனா வைரஸ், ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று தமிழகத்தில் மட்டும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் நண்பகல் 12 மணிக்கு மேல், இன்று முதல் ஊடரங்கு அமலுக்கு வருகிறது. அவசியம் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்டுடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை... கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் 90 களில், அஜித், விஜய் ,உள்பட பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை சிம்ரன் தற்போது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அறிவித்து, இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும், அருண் விஜய் கொரோனாவிற்கு எதிரான முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். இந்த புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் பிரபலங்கள் பலர், இதுபோல் தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு, எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டு கொள்ள பொதுமக்கள் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.