MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘நெஞ்சுக்கு நீதி’யில் உதயநிதி உடன் நடிக்க மறுத்த அருள்நிதி... அந்த நல்ல வாய்ப்பை தட்டிதூக்கியது யார் தெரியுமா?

‘நெஞ்சுக்கு நீதி’யில் உதயநிதி உடன் நடிக்க மறுத்த அருள்நிதி... அந்த நல்ல வாய்ப்பை தட்டிதூக்கியது யார் தெரியுமா?

Nenjuku needhi : நெஞ்சுக்கு நீதி படத்தை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். சமூக நீதி பேசும் இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : May 22 2022, 07:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இது இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தை இயக்கியுள்ளார். 

24

நெஞ்சுக்கு நீதி படத்தை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். சமூக நீதி பேசும் இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தன்யா, ஷிவானி ராஜசேகர், ஆரி அர்ஜுனன், மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

34

திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆன பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இப்படத்தை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

44

இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் உதயநிதியின் உறவினரும், நடிகருமான அருள்நிதி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஆரி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அவரை அணுகியதாம் ஆனால் அவர் அதில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம். அதேபோல் அதர்வாவும் அந்த ரோலில் நடிக்க மறுத்த பின்னரே அந்த வாய்ப்பு தனக்கு வந்ததாக நடிகர் ஆரி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...  மார்க் ஆண்டனி படத்தில் ஒய்யாரமான நடிகையுடன் டூயட் பாட உள்ள விஷால்... இந்த ஜோடி சூப்பரா இருக்கே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved