சில்க் ஸ்மிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஒரே நட்சத்திர நடிகர்! யார் தெரியுமா?
80கள் மற்றும் 90களில் தனது சிறப்பான நடனங்களால், மில்லியன் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த சில்க் ஸ்மிதா, இறுதிச் சடங்கில், ஒரே ஒரு நட்சத்திர நாயகனைத் தவிர, வேறு எந்த திரைப்பட பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. அவர் யார் தெரியுமா?
Silk Smitha
பெண்களே பொறாமை கொள்ளும் அழகாலும், கவர்ந்திழுக்கும் பார்வையாலும் ... கோடிக்கணக்கான ரசிகர்களின் மயக்கி, தென்னிந்திய திரையுலக இளவட்ட ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார் சில்க் ஸ்மிதா. தனது 18 வருட கால சினிமா வாழ்க்கையில், 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
சில்க் தங்களின் படத்தில் நடனம் ஆடினால், அதை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்ற டாப் ஹீரோக்கள், தங்களின் படங்களில் சில்க் நடனம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என விரும்பினர். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அந்த காலத்திலே 2 லட்சம் சம்பளமாக பெற்றார் சில்க் ஸ்மிதா.
Silk Smitha Death
திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் துயரங்கள் நிறைந்தது. சிறு வயதிலேயே பெற்றோர் இவரை குடிகாரர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க, மாமியார் கொடுமை தாங்க முடியாமல், ஊரை விட்டு ஓடி வந்து, நடிகரின் மேக்கப் அசிஸ்டெண்டாக பணியாற்ற துவங்கினார். பின்னரே இவரை வண்டி சக்கரம் படத்தில் அறிமுகக் செய்தார் வினுச்சக்ரவர்தி.
'சிங்க பெண்ணே' சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் வாங்கும் சம்பளம்! யாருக்கு அதிகம் தெரியுமா?
Silk Smitha
இந்த படத்தில் இவரின் கதாபாத்திரத்தின் பெயர் சில்க், கூடவே ஸ்மிதா என்பதையும் சேர்த்து இவருக்கு சில்க் ஸ்மிதா என பெயர் வைத்தார். ஐட்டம் டான்சராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கினாலும், ஏராளமான படங்களில், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதா, படம் எடுத்து அதில் நஷ்டமடைந்த நிலையில், தனது பணத்தை எல்லாம் ராதாகிருஷ்ணன் என்ற RMP மருத்துவரிடம் கொடுத்து வைத்த நிலையில், அவரும் ஏமாற்றிவிட்டு சென்றார். வறுமையிலிருந்து பணக்காரியாக மாறிய இவர், துரோகத்தால் மீண்டும் வறுமைக்குத் தள்ளப்பட்டார்.
Arjun Sarja
இதனால், மன அழுத்தம் மற்றும் மதுப் பழக்கம் அதிகரித்து, அவரது வாழ்க்கையை தற்கொலையில் முடித்து கொண்டார். செப்டம்பர் 23, 1996 அன்று அவர் காலமானபோது, 'அலிமாயா' படத்தில் இணைந்து நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார்ஜாவைத் தவிர, வேறு எந்த முக்கிய நட்சத்திரங்களும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.
இதற்க்கு ஒரு பின்னணியும் உண்டு. சகஜமாக அவர் அர்ஜூனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொது தனது இறுதிச் சடங்கிற்கு வருவீர்களா? என்று சில்க் ஸ்மிதா விளையாட்டாகக் கேட்டபோது, அர்ஜுன் சார்ஜா கண்டிப்பாக வருவதாக உறுதியளித்திருந்தார். இந்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெங்களூரில் இருந்து வந்து இவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அடேங்கப்பா... ஜெயலலிதா சொந்த குரலில் இத்தனை சூப்பர் ஹிட் பாடலை பாடி இருக்கிறாரா?