அந்த ஷோ ரொம்ப மோசம்.. தவறா காமிச்சு பெயரையே கெடுத்துட்டாங்க- சேனல் மாறியதும் பிக்பாஸை வெளுத்து வாங்கிய பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா, சமீபத்தில் அதிலிருந்து விலகிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. இதற்கு காரணம் நடிகை ஓவியா தான். அவரின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால், அவருக்கென டுவிட்டரில் ஆர்மியெல்லாம் தொடங்கி அதகளப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒருவரை காட்டப்படும் விதத்தில் தான் அவர்களது பாப்புலாரிட்டியோ, அல்லது நெகடிவ் விமர்சனங்களோ இருக்கும். அந்த வகையில், இந்நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சந்தித்த போட்டியாளர்கள் ஏராளம். உதாரணத்துக்கு முதல் சீசனில் பங்கேற்ற ஜூலியை சொல்லலாம். அவர் அந்நிகழ்ச்சியில் சொன்ன ஒரு பொய் அவருக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அந்நிகழ்ச்சிக்கு பின் சமூக வலைதளங்களில் அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் ஏராளம். அதேபோல் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட தொகுப்பாளினி அர்ச்சனாவும் கடும் விமர்சனங்களை சந்தித்தார். அந்நிகழ்ச்சியில் அவர் ஒரு குரூப் சேர்த்துக் கொண்டு விளையாடியதை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர். அன்பு கேங் என்றும் அதற்கு பெயரிட்டு ட்ரோல் செய்தனர்.
இதையும் படியுங்கள்... சூர்யா - ஜோதிகா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்து மழையால் திக்குமுக்காடிப் போன நட்சத்திர ஜோடி
அந்நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா, சமீபத்தில் அதிலிருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். அதில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்கிற ஷோவை அவர் தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளார். சேனல் மாறியதும் அர்ச்சனாவின் மகள் சாரா, பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி உள்ளார்.
அவர் கூறியதாவது : “என் அம்மா பிக்பாஸ் ஷோவில் கலந்துகொண்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் என் அம்மாவின் உண்மையான கேரக்டரை அதில் அவர்கள் காட்டவில்லை. அவரை வில்லி போலவே தவறாக காட்டி வந்தார்கள். அதன்மூலம் என் அம்மாவின் பெயரையும் கெடுத்துவிட்டார்கள். அந்நிகழ்ச்சி மூலம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்தது” என கூறியுள்ளார் சாரா.
இதையும் படியுங்கள்... சூர்யா இல்லை... ‘வேள்பாரி’க்காக வேறு மாநில நடிகரை ஒப்பந்தம் செய்த ஷங்கர் - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க