லோக்கலாக இறங்கிய அர்ச்சனா..! பொங்கிய ரியோ... சிக்கிய பாலாஜியை வச்சி செய்யும் புரோமோ..!
இன்றைய முதல் புரோமோவில், அனிதா தேவை இல்லாமல்... தன்னுடைய மனதை தானே குழப்பி கொண்டு, தேம்பி தேம்பி அழுதார்.
நேற்றைய தினம் இரண்டாவது முறையாக நாமினேஷன் பட்டியலில் இவர் இடைபிடித்திருப்பதால் இப்படி அழுததாக நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், பாலா சொன்ன ஒரு வார்த்தைக்காக, அவரிடம் ரியோ, நிஷா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் சண்டை போட காரணம் தேடி, பாலாவை திட்டுவது போல் தெரிகிறது.
பாலா சாதாரணமாக பேசி கொண்டிருக்கும் போது, அடுத்த வாரம் முழுவதும் அர்ச்சனாவை அம்மியில் அரைக்க விடுகிறேன் என்பது போல் சொன்னதாக தெரிகிறது. இது தான் இன்று பாலாவுக்கு எதிராக இன்று போட்டியாளர்கள் சண்டை வாங்க காரணமாக அமைந்துள்ளது.
அர்ச்சனாவை இப்படி சொன்னதால் ரியோ பொங்கி எழுந்து, எல்லோரையும் அம்மியில் அரைக்க விடுகிறேன் என்றால் நீ இங்கு இருப்பவர்களை எல்லாம் என்ன நினைத்து கொண்டிருக்கிறாய் என கூறுகிறார். இவருக்கு ஆதரவாக நிஷா, வேல்முருகன் உள்ளிட்ட சிலரும் ஒட்டு ஊதுகிறார்கள்.
ஆனால் பாலா செம்ம கூலாக ஜூஸ் குடித்து கொண்டு, நான் தப்பாக, மரியாதை குறைவாக பேச வில்லை என தெரிவிக்கிறார். மேலும் மனதில் நினைப்பதை கூட பேசக்கூடாத என கேட்கிறார்.
இதை தொடர்ந்து பேசும் அர்ச்சனா, பாலா தன்னை டார்கெட் செய்வது போல் கூறுகிறார்.
அம்மியில் அரைச்சதுக்கு அப்பறம் தானே தின்னுற அந்த சோத்தை என தன்னை விட வயதில் சிறியவர் பாலா என்பதை கூட நினைக்காமல் கொஞ்சம் லோக்கலாக இறங்கி சண்டை போடுகிறார்.