வரி கரெக்டா கட்ட வேண்டும் என்று அஜித் அடிக்கடி சொல்வார் – நடிகர் ஆரவ்!
Arav said that Ajith often tells me that you should Pay Taxes Correctly : சம்பாதிக்கும் பணத்தில் வரியை மட்டும் கரெக்டா கட்ட வேண்டும் என்று அஜித் என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார் என்று ஆரவ் கூறியுள்ளார்.

Ajith Kumar and Actor Arav
Arav said that Ajith often tells me that you should pay taxes correctly : பிக் பாஸ் தமிழ் சீசன் 1 மூலமாக பிரபலமானவர் தான் ஆரவ். இந்த சீசனின் டைட்டில் வின்னரானார். அதோடு மருத்துவ முத்தம் என்ற ஒன்றையும் ஓவியா உடன் இணைந்து டிரெண்டாக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக ஓ காதல் கண்மணி மற்றும் சைத்தான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தார்.
Arav Talk about Ajith Kumar's Secrets on Tax
இதையடுத்து கலகத் தலைவன், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், எந்த படமும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் இப்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக அவருடன் டிராவல் பண்ணியிருக்கிறார். அஜித்தின் பைக் டிராவல் பயணத்திலும் அவருடன் இணைந்து டிராவல் பண்ணியிருக்கிறார்.
Actor Arav and Vidaamuyarchi Movie
இந்த நிலையில் தான் அஜித்துடன் டிராவல் பண்ணும் போது அவர் சொல்லிய முக்கிய விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சம்பாதிக்கிற பணத்தில் சரியான முறையில் அரசுக்கு செலுத்த வரியை கட்டிவிட வேண்டும். சேமித்தை சேமிக்க வேண்டும், மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக வரியை மட்டும் கட்டாமல் விட்டுவிடக் கூடாது.
Vidaamuyarchi Movie
பணத்தை பதுக்கவும் கூடாது. வரும் பணத்தில் முறையாக வரிக்கு தனியாகவும், ஹெல்ப் பண்றதுக்கு தனியாகவும், உங்களுக்கு என்று தனியாகவும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நான் பாலோ பண்ணிட்டு இருக்கேன். நீங்களும் இதையே பாலோ பண்ணுங்க. ஆனால், அவர் செய்த உதவிகள் பற்றி எதுவும் என்னிடம் சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.
Ajith Kumar and Vidaamuyarchi
முன்தினம் பார்த்தேனே, தடையற்க தாக்க, மீகாமன், கலகத் தலைவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான படம் தான் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித், த்ரிஷா, ஆரவ், அர்ஜூன், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் ரிலீசான பிரேக்டவுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷனும் த்ரில்லர் நிறைந்த ஒரு படமாக விடாமுயற்சி படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10ஆம் தேதி ரிலீசாக இருந்த இந்தப் படம் வரும் 6ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.