Jonita Gandhi : அரபிக் குத்து பாடகிக்கு நயன்தாரா கொடுத்த ஜாக்பாட் வாய்ப்பு... ஹீரோயின் ஆகிறார் ஜோனிடா காந்தி
பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக் குத்து பாடலை பாடிய ஜோனிடா காந்தி (jonita gandhi), தற்போது நயன்தாரா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருவதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் (Nayanthara) தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருகின்றனர். கடந்த 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் காதலைப் போல் சினிமாவிலும் ஜொலித்து வருகிறார்கள்,
இவர்கள் இருவரும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக கடந்த 2020-ம் ஆண்டு ரவுடி பிக்சர்ஸ் (Rowdy Pictures) என்கிற பட நிறுவனம் ஒன்றை தொடங்கினர். அந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருவதோடு மட்டுமல்லாமல் சில படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இவர்கள் தயாரிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கூழாங்கல், ஊர்க்குருவி, வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் (Vignesh shivan) இயக்கி உள்ளார். நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது.
அதேபோல் கூழாங்கல் (Koozhangal) படத்தை வினோத்ராஜ் என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்து வருகிறது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் மற்றொரு படைப்பான ஊர்க்குருவி படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் (Vinayak) இயக்குகிறார். இப்படத்தில் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக நடித்த கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் கேகே-க்கு ஜோடியாக நடிப்பது பாடகி ஜோனிடா காந்தி (jonita gandhi) தான். அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். பீஸ்ட் படத்திற்காக இவர் பாடிய அரபிக் குத்து (Arabic Kuthu) என்கிற பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இப்பாடலில் ஜோனிடா அனிருத்துடன் சேர்ந்து பாடல் பாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதைப்பார்த்த ரசிகர்கள் அழகில் பூஜா ஹெக்டேவையே ஜோனிடா பீட் செய்துவிட்டதாக மீம்ஸ் போட்டு வந்தனர். தற்போது அவர் நயன்தாரா (Nayanthara) தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருவதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.... அஜித்தின் அல்டிமேட் குத்து... வேறலெவல்ல இருக்கே!! ‘Beast’க்கு போட்டியாக Valimai படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ