‘மனிதனாக உணராதவரை சில நேரங்களில் வெறுக்கக் கூடும்’ - ஏ.ஆர்.ரகுமான் பளீச் பேட்டி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து, அடிக்கடி தான் தலைப்புச் செய்தி ஆவது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

Isaipuyal AR Rahman : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீப காலமாக பரபரப்பாக பேசப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பரபரப்பு ஓய்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் ஏ.ஆர்.ரகுமான்.
AR Rahman
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?
உடல்நலம் பாதிக்கப்பட்ட பின் எந்தவித பேட்டியும் கொடுக்காமல் இருந்த ஏ.ஆர்.ரகுமான், சமீபத்தில் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், அதுபற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : நான் நோன்பு இருந்ததாலும், சைவமாக மாறியதாலும் எனக்கு இரைப்பையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அதன்பின்னர் என்ன ஆனது என்பதை என்னைப் பற்றி வந்த பத்திரிக்கை செய்தி மூலம் தான் தெரிந்துகொண்டேன். நான் வாழ வேண்டும் என்று இவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்பதை அறிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார்
இதையும் படியுங்கள்... AR Rahman: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்த 'ஜெய் ஹோ' பாடலை நிராகரித்த டாப் ஹீரோ!
AR Rahman, Saira Banu
தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்தி ஆவது ஏன்?
தனது தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்தி ஆவது பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், நீங்கள் மனிதனாக உணராத ஒருவரை சில நேரங்களில் வெறுக்கக் கூடும். நானும் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டேன். அதுவே உண்மை. ஒவ்வொருவருக்கு ஒரு சிறந்த குணம் இருக்கும். அவரவர் தங்கள் வீட்டில் ஒரு சூப்பர் ஹீரோவாக தான் இருப்பார்கள். ஆனால் ரசிகர்கள் என்னை சூப்பர் ஹீரோ ஆக்கினார்கள். அவர்களிடம் இருந்து இவ்வளவு அன்பும், ஆசீர்வாதமும் கிடைப்பது ஒருவிதமான அதிசயம் தான் என ரகுமான் கூறினார்.
AR Rahman Interview
இசை நிகழ்ச்சியில் பிசியான ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான் தற்போது தன்னுடைய இசை நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறார். மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் வருகிற மே 3ந் தேதி ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள 18 நகரங்களில் wonderment என்கிற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இதுதவிர தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார் ரகுமான்.
இதையும் படியுங்கள்... நாங்க இன்னும் பிரியல; ப்ளீஸ் முன்னாள் மனைவினு சொல்லாதீங்க - சாய்ரா பானு வேண்டுகோள்