திலீப் குமார்... அல்லா ரக்கா ரகுமானாக மாறியது ஏன்?... பலருக்கும் தெரிந்திடாத இசைப்புயலின் சுவாரஸ்ய பின்னணி..!
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1967ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி சென்னையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப்குமார். இவர் எப்படி ஏ.ஆர்.ரகுமான் ஆனார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய வந்துள்ளார். அப்போது அனைத்து வகையான இசைக்கருவிகளும் அவரது வீட்டில் இருக்குமாம். இதுதான் ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை ஆர்வத்தை தூண்டியதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு படிப்பின் மீது பெரியளவில் ஆர்வம் கிடையாதாம். இதன்காரணமாக இசையின் மீது அவர் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதன்காரணமாக அவர் தனது தந்தையுடன் இசை ஸ்டுடியோவில் மணிக்கணக்கில் செலவிடுவாராம். அப்போது பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு 9 வயது இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பமும் பொருளாதர ரீதியாக கஷ்டப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பும் ஏ.ஆர்.ரகுமானுக்கு இருந்துள்ளது.
இப்படி குடும்பம் வறுமையில் இருந்த காலத்தில், அவரது சகோதரி ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், மருத்துவர்களால் கூட அதனை குணப்படுத்த முடியவில்லையம். இதன்பின்னர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் ஒரு முஸ்லீம் பக்கீரை சந்தித்து தனது மகளுக்கு உள்ள பிரச்சனை பற்றி தெரிவித்துள்ளார். அந்த ஃபக்கீரின் பிரார்த்தனையால் ரகுமானின் சகோதரி குணமடைந்துள்ளார், அதன் பிறகு தான் ரகுமானுக்கு இஸ்லாம் மீதான நம்பிக்கை அதிகரித்தது.
இதையும் படியுங்கள்... 8 வருட காத்திருப்புக்கு பின்பெற்றோரான சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில் - ஸ்ரீஜா! குவியும் வாழ்த்து!
திலீப்பாக இருந்த அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான காரணமும் அதுதானாம். இதனால் தனது பெயரை ரகுமான் என மாற்றிக்கொண்டுள்ளார். அதே நேரத்தில், அவரது தாயும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார், அவர் ரகுமானின் பெயருடன் அல்லாவை சேர்க்க விரும்பியுள்ளார். இதன்பிறகு, தனது தாயின் ஆசைப்படி தனது பெயரை அல்லா ரக்கா ரகுமான் என மாற்றிக்கொண்டாராம்.
23வது வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் மணிரத்னத்தின் ரோஜா பட வாய்ப்பு. இதன்பின்னர் தான் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயலாக மாறி இன்றளவும் வேகம் குறையாமல் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... துணிவு - வாரிசு படங்களுக்கு ரசிகர் ஷோ ரத்து?... விஜய் - அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி