Forbes பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை இவங்க தான்! நயன்தாரா, த்ரிஷா இல்ல!
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டுக்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை அபர்ணா பாலமுரளி இடம்பிடித்துள்ளார்.

போர்ஃப்ஸ் அண்டர் 30 பட்டியல்
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்தியாவில் அதிக அளவில் பிரபலமான 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான 30 வயதுக்கும் கீழான 30 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகைகளில் அபரணா பாலமுரளி மட்டுமே இந்த ஆண்டின் பிரபலமாக இடம்பெற்றுள்ளார்.
போர்ஃப்ஸ் அண்டர் 30 பட்டியல்
பாலிவுட் நடிகர் ரோஹிக் சரப் என்பவரும் இதே பிரிவில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்த பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு அபர்ணா பாலமுரளி தமிழில் தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படத்தில் நடித்திருந்தார்.
போர்ஃப்ஸ் அண்டர் 30 பட்டியல்
மேலும் மலையாளத்தில் ‘ கிஷ்கிந்தா காண்டம்’ மற்றும் ருத்ரம் ஆகிய படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி தனது அழுத்தமான முத்திரையை பதித்திருந்தார்.
போர்ஃப்ஸ் அண்டர் 30 பட்டியல்
2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மகேஷ்ஷிண்டே பிரதிகாரம் என்ற படத்தில் அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். பின்னர் தமிழில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2020-ம் ஆண்டு சுதா கோங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.