MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து மெர்சலான பாலிவுட் பிரபலங்கள்..“பா.இரஞ்சித்தோட பெஸ்ட் படம் இது” என புகழாரம்

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து மெர்சலான பாலிவுட் பிரபலங்கள்..“பா.இரஞ்சித்தோட பெஸ்ட் படம் இது” என புகழாரம்

Natchathiram Nagargiradhu : பாலிவுட் திரையுலக பிரபலங்களான அனுராக் கஷ்யப், நந்திதா தாஸ், நீரஜ் கைவான் போன்றோருக்கு தனது நட்சத்திரம் நகர்கிறது படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் இயக்குனர் பா.இரஞ்சித்.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 29 2022, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் பா.இரஞ்சித்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்து இருக்கிறார். இதுதவிர கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர், சிந்துஜா விஜி, சார்லஸ் வினோத் உள்பட ஏராளமான நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தென்மா இசையமைத்து உள்ளார். 

35

இதுவரை சந்தோஷ் நாராயணன் உடன் மட்டுமே பணியாற்றி வந்த பா.இரஞ்சித் இப்படத்தின் மூலம் முதன்முறையாக வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றி உள்ளார். நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விக்ரமின் கோப்ரா படத்துக்கு போட்டியாக இப்படம் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்... கைதி பட கார்த்தி லுக்கில் விஷால்... வைரலாகும் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

45

படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே எஞ்சி உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பை சென்ற இயக்குனர் பா.இரஞ்சித் அங்கு பாலிவுட் திரையுலக பிரபலங்களான அனுராக் கஷ்யம், நந்திதா தாஸ், நீரஜ் கைவான் போன்றோருக்கு தனது நட்சத்திரம் நகர்கிறது படத்தை திரையிட்டு காட்டியுள்ளார்.

55

அப்போது படத்தை பார்த்த மூவரும் வாயடைத்துப் போய்விட்டார்களாம். அந்த அளவுக்கு படம் சூப்பராக இருப்பதாக பாராட்டினார். படம் முடிந்து வெளியே வந்ததும் இயக்குனர் பா.இரஞ்சித்தை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன இயக்குனர் அனுராக் கஷ்யப். இதுவரை அவர் இயக்கிய படங்களிலேயே இது பெஸ்ட் என பாராட்டினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பா. இரஞ்சித்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image3
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved