மீண்டும் கொரோனா: நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு லாக்டவுன்! இதோ வந்த புதிய அப்டேட்!
Lockdown Official Trailer Review : கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அடுத்த 21 நாட்களுக்கு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக லாக்டவுன் டிரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா பரவியதையும், அதனால் நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டதையும் யாராலயும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் அது கொரோனா பரவல். இதில் எத்தனையோ பேர் தங்களது நெருங்கிய உறவினர்களை இழந்தனர். மேலும், பலரது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
லாக்டவுன் டிரைலர்
அப்படிப்பட்ட ஒரு லாக்டவுன் தான் மீண்டும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. ஆம், ஆனால், அது சினிமாவில் தான். வரும் டிசம்பர் 5ஆம் தேதி லாக்டவுன் என்ற படம் திரைக்கு வருகிறது. இயக்குநர் ஏ ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் தான் லாக்டவுன். இந்தப் படத்தில் சார்ளி, நிரோஷா, லிவிங்ஸ்டன், லொள்ளு சபா மாறன், பிரியா வெங்கட் என்ற ஏராளமான சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
லாக்டவுன் டிரைலர்
இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு லாக்டவுன் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் போன் போட்டு காசு கேட்கும் நிலை ஏற்படுகிறது.
லாக்டவுனில் என்ன நடந்தது
உண்மையில் லாக்டவுனில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்தப் படம் சித்தரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியாரே திரைப்படமும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமீபத்திய தகவல்படி அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
லாக்டவுன்
அதனால் அந்த தேதியை லாக்டவுன் படக்குழு பிடித்துள்ளது. இதில் அனிதா அடிக்கடி வெளியில் சென்று வருகிறார். எது கேட்டாலும் கோபப்படுகிறார். எப்போதும் போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அனிதா என்ற ரோலில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன்
இந்தப் படத்திற்கு முன்னதாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள டிராகன், பைசன் காளமாடன் ஆகிய 2 படங்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்த வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.