MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக் பாஸ் முடிந்ததும் முதல் வேலையாக காதலை பிரேக் அப் பண்ணிய அன்ஷிதா!

பிக் பாஸ் முடிந்ததும் முதல் வேலையாக காதலை பிரேக் அப் பண்ணிய அன்ஷிதா!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி முடிவடைந்ததும் முதல் வேலையாக தன் காதலை முறித்துக் கொண்டதாக நடிகை அன்ஷிதா கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 21 2025, 07:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anshitha, Vishal

Anshitha, Vishal

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் டிராபி மற்றும் ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பைனல் மேடை வரை வந்த செளந்தர்யாவுக்கு இரண்டாவது இடமும், விஷாலுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Anshitha

Anshitha

பிக் பாஸ் வீட்டில் அதிக காதல் சர்ச்சையில் சிக்கியவர் என்றால் அது அன்ஷிதா தான். அவர் இந்நிகழ்ச்சிக்கு உள்ளே வரும் முன்னரே நடிகர் அர்னவ்வை காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் இந்நிகழ்ச்சியில் அவர் விஷால் உடன் நெருங்கிப் பழகி வருவதை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் காதலிக்கிறார்களா அல்லது நண்பர்களாக இருக்கிறார்களா என்பது தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர். இந்நிகழ்ச்சி முடியும் வரை இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளது நட்பா.. காதலா என்பதை இருவருமே உறுதிபடுத்தவில்லை.

இதையும் படியுங்கள்... விலகுகிறாரா விஜய் சேதுபதி? அடுத்த சீசன் தொகுப்பாளர் பற்றி ஹிண்ட் கொடுத்த பிக் பாஸ்!

34
Anshitha, Vijay Sethupathi

Anshitha, Vijay Sethupathi

பிக் பாஸ் வீட்டில் ரீ எண்ட்ரி ஆனபோது கூட விஷால் உடன் அன்ஷிதா நெருக்கமாக பழகி வந்தார். இதனிடையே பிக் பாஸ் பைனலின் போது போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்டார். அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு நிஜ உலகத்திற்குள் சென்றதும் நீங்கள் செய்த முதல் வேலை என்ன என கேட்டிருந்தார். இதற்கு போட்டியாளர்கள் தாங்கள் என்ன செய்தோம் என்பதை விளக்கி கூறினர். அதில் அன்ஷிதா அளித்த பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

44
Bigg Boss Anshitha

Bigg Boss Anshitha

தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக தன் காதலை முறித்துக் கொண்டதாக கூறிய அன்ஷிதா, அதற்கான காரணத்தையும் கூறினார். தன் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக இருந்ததாகவும், அப்போது இனி அவனுக்கு நான் தேவைப்படமாட்டேன் என முடிவெடுத்து காதலை முறித்துக்கொண்டதாக தெரிவித்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்னை இன்னொருவரிடம் இருந்து மீட்டுக் கொடுத்திருக்கிறது என அன்ஷிதா கூறியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் அர்னவ்வை தான் பிரேக் அப் செய்துவிட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிஞ்சதுமே ஆரம்பிச்சிடீங்களா? சௌந்தர்யாவின் புகைப்படத்துக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved