விக்னேஷ் சிவனை விட்டு விலகி இருக்கும் நயன்தாரா... லேடி சூப்பர் ஸ்டாருக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடு...!
ஒரே ஊரில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் கூட பார்த்துக் கொள்ள முடியாத அளவிற்கு நயன்தாராவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதற்காக தனி விமனத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது
தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறதாம். விஜய்சேதுபதி, சமந்தா நடித்து வரும் இந்த படத்திற்காக விக்கியும் ஐதராபாத்தில் தான் தங்கியுள்ளார்.
ஒரே ஊரில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் கூட பார்த்துக் கொள்ள முடியாத அளவிற்கு நயன்தாராவிற்கு அண்ணாத்த படக்குழு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆம்... கொரோனா பரவல் காரணமாக நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் உட்பட ஒட்டுமொத்த அண்ணாத்த படக்குழுவும் பயோ பபுளுக்குள் இருக்கிறார்களாம். அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு தீவிர பாதுகாப்புடன் 'அண்ணாத்த' படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். பயோ பபுள் முறையால் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருகிறாராம்.