சண்முகம் குடும்பத்தை அழிக்க நடக்கும் சதி; எதிர்பாராத டுவிஸ்ட்: அண்ணா சீரியல்!
Anna Serial Update: 'அண்ணா' சீரியலில் சண்முகம் குடும்பத்தை அழிக்க சொந்தரபாண்டி திட்டம் போட்ட நிலையில், கடைசியில் நடந்த ட்விஸ்ட் பற்றி தற்போது பார்ப்போம்.

அண்ணா சீரியல் அப்டேட் :
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வர சௌந்தரபாண்டியை பார்த்து கிண்டல் அடித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
17 வருடத்திற்கு முன் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை... தனது பெயராக மாற்றிய காமெடி நடிகர் சாம்ஸ்!
வீராவிடம் காதலை சொன்ன சிவபாலன்:
அதாவது, கோவிலுக்குள் வந்த சிவபாலன், வீராவை பார்த்து அவளிடம் தனது காதலை சொல்லி வம்பு இழுக்க... இதை சௌந்தரபாண்டி மற்றும் சாமி இருவரும் தூரத்தில் இருந்து பார்க்கின்றனர். சிவபாலன் தாலியை தான் கேட்பதாக நினைத்து சௌந்தரபாண்டி அருகே வந்து என்னடா கேட்டியா என்று ஒரு வித அதட்டலோடு சௌந்தரபாண்டி கேட்கிறார்.
என் வாழ்வை மாற்றிய படம்... காந்தாரா சாப்டர் 1 குறித்து நடிகை ருக்மிணி வசந்த் உருக்கம்
சண்முகம் குடும்பத்துக்கு எதிராக நடக்கும் சதி:
சிவபாலனும் அதை தான் கேட்டதாக சொல்கிறான். பின்னர் நீங்க குறுக்கே வந்துட்டீங்க என்று சொல்லி அவரை அனுப்பி வைத்து தனது அட்ராசிட்டியை தொடர்கிறான். அடுத்ததாக சண்முகம் குடும்பத்தினர் வந்த வேனில் பாம் வைத்து சௌந்தரபாண்டிக்கு தகவல் கொடுக்கின்றனர். மேலும் பாம் வெடித்தால் வேனில் இருப்பவர்கள் ஒருத்தரின் எலும்பு கூட தேறாது என சொல்கின்றனர்.
பதறும் சௌந்தரபாண்டி:
அதன் பிறகு எல்லோரும் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்ப, எல்லோரும் வேனில் இருக்கின்றனர். பாக்கியம், பரணி, முத்துப்பாண்டி ஆகியோரும் இதே வேனில் ஏற சௌந்தரபாண்டி பதறுகிறார். பாண்டியம்மாவையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்கின்றனர். சௌந்தரபாண்டி தனது குடும்பத்தாரை காப்பாற்ற பின்னாடியே வேனை பின் தொடர்ந்து செல்கிறார். பாண்டியம்மா பயத்தில் வேனில் பாம் இருப்பதாக சொல்ல சண்முகம் குடும்பத்தினர் அதை நம்ப மறுக்கின்றனர்.
ஒரு வழியாக வீடு வந்து இறங்க ஆரத்தி எடுத்து அறிவழகன் ரத்னாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர். பாண்டியம்மா பயத்தில் நடுங்கியபடி சௌந்தரபாண்டி அருகே செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.