தவறான உறவில் இருந்தேன்..! யார் அவர்? நடிகை அஞ்சலி கூறிய பரபரப்பு தகவல்..!
தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக ரசிகர்களால் அறியப்படும் நடிகை அஞ்சலி தவறான உறவில் இருந்ததாக கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரை உலகின் மூலம், நடிகை அஞ்சலி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கி இருந்தாலும்... இவரின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமா தான்.
இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான, 'கற்றது தமிழ்', திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க துவங்கிய அஞ்சலி, இதைத் தொடர்ந்து நடித்த 'அங்காடி தெரு', 'தூங்கா நகரம்', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.
ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி' !
இந்நிலையில் அஞ்சலி 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தனக்கு நண்பராக அறிமுகமான ஜெய்யுடன் 'எனக்கு வாய்த்த அடிமைகள்', 'பலூன்' போன்ற படங்களில் தொடர்ந்து நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான சில புகைப்படங்களையும் இருவரும் வெளியிட்ட நிலையில், பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது.
மேலும் இடைப்பட்ட காலத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சரிவர திரையுலகில் கவனம் செலுத்தாமல், நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. இதற்க்கு காரணம் தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பது தான் என சில கிசுகிசு எழுந்த நிலையில், தற்போது முதல் முறையாக... டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து ஊடகம் ஒன்றிக்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும், நடிகை அஞ்சலி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் யார் என்பதை அஞ்சலி கூற மறுத்துவிட்டார்.
நடிகை அஞ்சலி நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த தமிழ் படங்களும் வெளியாகாத நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ராம் சரண் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அதே போல் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும், 'ஃபால்ஸ்' என்கிற வெப் தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷை விவாகரத்து செய்த பின்... ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோ ஷூட்டில் கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.