- Home
- Cinema
- சிவகார்த்திகேயன் - அனிருத் இடையே மோதலா?... எஸ்.கே படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைக்க மறுத்தது ஏன்?
சிவகார்த்திகேயன் - அனிருத் இடையே மோதலா?... எஸ்.கே படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைக்க மறுத்தது ஏன்?
சிவகார்த்திகேயன் படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்ததாகவும் இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயனும், அனிருத்தும் ஒரே நேரத்தில் திரையுலகில் அறிமுகமானவர்கள். இருவரும் 3 படம் மூலம் தான் எண்ட்ரி கொடுத்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் போன்ற படங்களுக்கு இசையமைத்தார் அனிருத். இவர் கூட்டணியில் வெளிவந்த 7 படங்களிலுமே பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.
கடைசியாக சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் டான் படம் வெளியானது. கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் பாடல்கள் ஹிட்டானதைப் போல் பாடமும் வேறலெவலில் ஹிட் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. டான் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்தார். இதற்கு அடுத்தபடியாக தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... ஏய் எப்புட்ரா! 1500 திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
மாவீரன் படத்துக்கும் பரத் சங்கர் என்கிற இளம் இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இதுதவிர சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்துக்கு ஜிவி பிரகாஷும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் சிவகார்த்திகேயன் பணியாற்றி வருவதால் அவருக்கும் அனிருத்தும் இடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாகவே அவர் இவ்வாறு பிற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வருவதாக தகவல் பரவியது.
அதோடு சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கும் அனிருத் இசையமைக்க மறுத்ததாகவும் தகவல் வெளியானதால் அனிருத் - சிவா இடையேயான மோதல் உறுதி என்பதுபோல் பேச்சுகளும் அடிபட தொடங்கின. ஆனால் உண்மையில் அனிருத் கைவசம் லியோ, இந்தியன் 2, ஜெயிலர், தலைவர் 171, ஜவான், ஜூனியர் என்.டி.ஆர் படம் என தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களாக கைவசம் வைத்துள்ளதால், அவர் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க மறுத்ததாகவும், மற்றபடி இருவருக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இன்னைக்கு ஒரு புடி..! நடிகர் மாதவனை வீட்டுக்கு அழைத்து தடபுடலாக விருந்து வைத்த சுதா கொங்கரா - காரணம் என்ன?