MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anirudh - Kavya Maran : வெளிநாட்டில் ஜாம் ஜாம்னு நடக்கப்போகும் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்? எப்போ தெரியுமா?

Anirudh - Kavya Maran : வெளிநாட்டில் ஜாம் ஜாம்னு நடக்கப்போகும் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்? எப்போ தெரியுமா?

Anirudh - Kavya Maran Wedding : இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : May 22 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anirudh   Kavya Maran Wedding
Image Credit : X

Anirudh - Kavya Maran Wedding

சினிமாவும் கிரிக்கெட்டும் சேர்ந்தால், அங்கு ஒரு சுவாரஸ்யமான கிசுகிசுவுக்குப் பஞ்சம் இருக்காது. இப்போது கோலிவுட் முழுவதும் அப்படியொரு பெரிய செய்திதான் தீயாகப் பரவி வருகிறது. அது வேறு யாருமல்ல, தமிழ் சினிமாவின் 'மியூசிக் சென்சேஷன்' அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் 'ஐகான்' காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம்தான் அந்த ஹாட் டாபிக்! ஆமாம், கடந்த சில நாட்களாக இவர்களின் திருமணம் உறுதியாகிவிட்டதாக இணையத்தில் செய்திகள் வட்டமடிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திருமணம் எப்போ?
Image Credit : X

திருமணம் எப்போ?

தற்போது வரும் தகவல்களின்படி, இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இந்த ஹை-ப்ரொஃபைல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சன் நெட்வொர்க் மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் வாரிசான காவ்யா மாறனுக்கும், ஒரு படத்திற்கு சுமார் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அனிருத்துக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகவே காதல் இருப்பதாகப் பேச்சு அடிபட்டது. இவர்கள் இருவரும் லாஸ் வேகாஸில் ஒன்றாகச் சுற்றியதாகவும், அங்கு டின்னர் டேட்டிங் சென்றதாகவும் வெளியான செய்திகள் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தன.

35
அனிருத்தின் ரியாக்‌ஷன் என்ன?
Image Credit : facebook

அனிருத்தின் ரியாக்‌ஷன் என்ன?

பொதுவாக அனிருத் இதுபோன்ற செய்திகளைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார். ஆனால் சமீபத்தில் பத்திரிகையாளர்கள், "சார், கல்யாணப் பத்திரிக்கை எப்போ கொடுப்பீங்க?" என்று கேட்டபோது, அனிருத் புத்திசாலித்தனமாகச் சிரித்துக்கொண்டே, "அது வேற விஷயம்..." என்று கூறி நழுவினார். இதற்கு முன் திருமண வதந்திகள் பரவியபோது, "கொஞ்சம் ரூமர்ஸ் பரப்புவதை நிறுத்துங்க பாஸ்" என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால், இந்த முறை காவ்யா மாறன் பெயர் அடிபடுவதால், அனிருத் அவ்வளவு கடுமையாக எதிர்வினையாற்றவில்லை. இதுவே ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

45
அனிருத்தின் இசையும் காதலும்
Image Credit : Asianet News

அனிருத்தின் இசையும் காதலும்

காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான 'சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் பல பெரிய படங்களுக்கு அனிருத்தான் இசை அமைப்பாளர். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படமாகட்டும், வரவிருக்கும் பெரிய ப்ராஜெக்ட்களாகட்டும், அனிருத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே ஒரு வலுவான தொழில்முறை உறவு இருக்கிறது. இந்த தொழில்முறை உறவு, இப்போது தனிப்பட்ட உறவாக மாறப்போகிறதா என்பதுதான் அனைவரின் கேள்வியும்.

55
ரஜினி தான் காரணமா?
Image Credit : Instagram

ரஜினி தான் காரணமா?

இந்தத் திருமணச் செய்திக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான ட்விஸ்ட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்! அனிருத், ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அண்ணன் மகன், அதாவது ரஜினிக்கு உறவினர். மறுபுறம், கலாநிதி மாறனுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே பல தசாப்த கால நட்பு உள்ளது. எனவே, இந்த இரண்டு பெரிய குடும்பங்களையும் இணைப்பதற்காக, 'தலைவரே' பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இரு வீட்டாரிடமிருந்தும் கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி என்றும் கூறப்படுகிறது.

காவ்யா மாறனுக்கு இப்போது 33 வயது, அனிருத்துக்கு 35 வயது. வயது மற்றும் அந்தஸ்துக்கு இந்த ஜோடி சரியான பொருத்தம் என்பது ரசிகர்களின் கருத்து. மொத்தத்தில், ஐபிஎல் மைதானத்தில் டென்ஷனாகக் காணப்படும் காவ்யாவும், மேடையில் தீப்பொறி பறக்கவிடும் அனிருத்தும் நிஜத்தில் ஒன்று சேர்வார்களா? இந்த ரகசியத்திற்கு ஆகஸ்ட் மாதம் விடை கிடைக்கலாம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Related Stories
Recommended image1
அனிருத் Underrated பாடல்கள்... ஒவ்வொன்னும் வேற ரகம் - மிஸ் பண்ணாம கேளுங்க..!
Recommended image2
நியூயார்க்கில் அனிருத் உடன் அவுட்டிங் சென்ற காவ்யா மாறன்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved