- Home
- Cinema
- அட்ராசக்க... விஜய்யின் ‘பீஸ்ட்’க்கு ரீமிக்ஸ் பாடல் மூலம் பூஸ்ட் ஏத்தும் அனிருத் - அது என்ன பாட்டு தெரியுமா?
அட்ராசக்க... விஜய்யின் ‘பீஸ்ட்’க்கு ரீமிக்ஸ் பாடல் மூலம் பூஸ்ட் ஏத்தும் அனிருத் - அது என்ன பாட்டு தெரியுமா?
விஜய்யின் (Vijay) பீஸ்ட் (Beast) படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் ரீமிக்ஸ் பாடல் ஒன்று இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ள படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், பீஸ்ட் படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் ரீமிக்ஸ் பாடல் ஒன்று இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அது கில்லி படத்தின் பாடல் எனவும் சொல்லப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஏற்கனவே மாஸ்டர் படத்திலும் கில்லி படத்தில் இடம்பெறும் கபடி பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் அனிருத்.
மேலும் அண்மையில் அளித்த பேட்டிகளில் கூட கில்லி படத்தில் இடம்பெறும் அர்ஜுனரு வில்லு என்கிற பாடல் தன்னுடைய பேவரைட் என கூறி இருந்தார் அனிருத்.
இதன்மூலம் அவர் பீஸ்ட் படத்திற்காக அர்ஜுனரு வில்லு பாடலை தான் ரீமிக்ஸ் செய்திருப்பார் போல தெரிகிறது. கில்லி படத்திற்காக இந்த பாடலை வித்யாசாகர் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.