- Home
- Cinema
- சூர்யாவுக்கு வாட்ச்... லோகேஷுக்கு கார்... உங்களுக்கு என்ன கொடுத்தார் கமல்?- ரசிகர்களிடம் ஓப்பனாக சொன்ன அனிருத்
சூர்யாவுக்கு வாட்ச்... லோகேஷுக்கு கார்... உங்களுக்கு என்ன கொடுத்தார் கமல்?- ரசிகர்களிடம் ஓப்பனாக சொன்ன அனிருத்
Anirudh : கேரளாவில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜும், அனிருத்தும் சென்றிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அனிருத்திடம், கமல் உங்களுக்கு என்ன பரிசு அளித்தார்? என கேட்டார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா, செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராஜ், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. வெளியானது முதல் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் வெற்றியால் குஷியில் இருக்கும் கமல், அதில் பணியாற்றியவர்களுக்கு படிப்படியாக பரிசுகளை வழங்கி வருகிறார். இதுவரை இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரும், நடிகர் சூர்யாவுக்கு ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்சும் வழங்கிய கமல், இப்படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கை பரிசாக அளித்துள்ளார்.
இதேபோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோருக்கும், சிறப்பாக இசையமைத்திருந்த அனிருத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பரிசுகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை எந்தவித பரிசும் அவர்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அண்மையில் கேரளாவில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜும், அனிருத்தும் சென்றிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அனிருத்திடம், கமல் உங்களுக்கு என்ன பரிசு அளித்தார்? என கேட்டார். இதற்கு, கமல் சார் எனக்கு விக்ரம் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்ததே பரிசு தான் என அசத்தலான பதிலைக் கூறிவிட்டு சென்றுள்ளார் அனிருத்.
இதையும் படியுங்கள்... Director Nelson : லோகேஷ் கனகராஜை விட அதிகம் சம்பளம் வாங்கும் நெல்சன்... பீஸ்ட் இயக்குனருக்கு இவ்வளவு மவுசா?