மற்றொரு மார்பிலும் புற்றுநோய்... கசாப்பு கடையில் அறுப்பது போல் அறுத்துவிட்டனர் - கதறி அழுத நடிகை சிந்து
அங்காடித் தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து, மார்பக புற்றுநோயால் தான் சந்தித்து வரும் கஷ்டங்கள் பற்றி கண்ணீர்மல்க பேசி உள்ளார்.
அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து. இதையடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு ஒருபக்கம் மார்பகம் எடுக்கப்பட்டது. இருப்பினும் அதிலிருந்து முழுமையாக குணமடைய முடியாமல் போராடி வரும் சிந்து, மருத்துவ செலவுக்கே காசில்லாமல் கஷ்டப்படுவதாக சமீபத்திய பேட்டியில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது : “புற்றுநோயால் இன்னும் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன். நான் இறைவனிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். என்னை உன்னிடம் அழைத்துக் கொள் இல்லையென்றால் நிம்மதியாக வாழவிடு என்பது தான். இதனால் நான் மட்டும் சித்திரவதையை அனுபவிக்கவில்லை, என்னுடன் இருப்பவர்களையும் கஷ்டப்படுத்தி வருகிறேன். புற்றுநோய்க்கு மருந்தே இல்லை என்றாலும் நிறைய பேருக்கு மார்பக புற்றுநோய் வந்து குணமாகி இருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் சின்னக்கட்டி தான் வந்தது, நானும் மருத்துவர்களிடம் காட்டியபோது, அது நீர்கட்டி என்று சொல்லிவிட்டனர். அதனால் நானும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் மார்பில் பெரிய ஊசி ஒன்றை குத்தி அதிலிருந்து சதையை எடுத்து பயாப்சிக்கு கொடுத்தாங்க. நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு அதுதான். அதன்பின்னர்தான் கட்டிகள் பரவ ஆரம்பித்தன. அந்தக் கட்டிகளில் இருந்து நீர் வழிந்து வலியும் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்... தொகுப்பாளினி டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! அது ஒரு நோய்.. பகீர் கிளப்பும் பயில்வான்!
அதன்பின்னர் மருத்துவரை அணுகியபோது, அவர் என்ன ஏது என கேட்காமலேயே புற்றுநோய் என கூறி கசாப்பு கடையில் அறுப்பது போல் என் ஒருபக்க மார்பை அறுத்துவிட்டனர். என்னால் 10, 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியாது. இரவில் மூச்சு திணறல் ஏற்படும். இதற்காக ஏராளமான மாத்திரைகளும் எடுக்கிறேன். 10 நாளைக்கு மாத்திரைக்கு மட்டும் ரூ.7 ஆயிரம் செலவாகிறது. கழிப்பறை செல்ல வேண்டுமென்றால் கூட ஒருவரின் உதவி தேவைப்படுகிறது.
அடிக்கடி பிறரை தொல்லை செய்யக்கூடாது என்பதால் குழந்தைகள் போல் டயபர் பயன்படுத்துகிறேன். சினிமாவில் சம்பாதிச்ச காசெல்லாம் உதவி செஞ்சுட்டேன். உறவினர்களும் உதவ மாட்டார்கள். இடது கை முழுவதுமாக செயலிழந்துவிட்டது. சாப்பிட, கால் கழுவ எல்லாம் ஒரே கையில் தான் செய்ய வேண்டும். கஞ்சியை தவிர வேறு உணவு சாப்பிடக்கூடாது. இப்படி இம்சைகளுக்கு மத்தியில் நான் வாழ்வதை விட சாவதே மேல்.
ஏற்கனவே உள்ளது போதாதுன்னு இன்னொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவிவிட்டது. வலி தாங்க முடியல. விஷால் போன்றவர் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவினால் அந்த மார்பகத்தையும் அகற்றிவிடலாம். என்னிடம் சுத்தமாக பணமில்லை. பெரிய நடிகர்கள் தயவு செய்து உதவுங்கள்” என கண்ணீர்மல்க பேசி உள்ளார் சிந்து.
இதையும் படியுங்கள்... அட பாவிங்களா நல்லா இருப்பீங்களா? கார்த்தியின் மகன் ப்ரீகேஜி செலவை கூறி.. பள்ளியை திட்டி தீர்த்த சிவகுமார்!