என்னை கட்டாயப்படுத்தினார்..ஊ சொல்ட்ரியா உண்மை சொன்ன ஆண்ட்ரியா..
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தன்னை வற்புறுத்தி பாடலை பாடச்சொல்லியதாக ஆண்ட்ரியா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்..

Andrea Jeremiah
பாடகியாக இருந்தது நடிகையாக உயர்ந்த ஆண்ட்ரியா “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபன் இரண்டு பாகங்கள், வடசென்னை, அரண்மனை, காட்டேரி என வரிசையாக படங்களில் நடித்தார். படங்களில் வெற்றி பெற்ற போதிலும் சொந்த வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்த ஆண்ட்ரியா மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு பிறகு மீண்டும் தனது அலுவல்களில் ஈடுபட்டு வருகிறார்.
Andrea Jeremiah
ஆண்ட்ரியா மரியா ஜெரேமியா பின்னணிப் பாடகி மற்றும் இசைக்கலைஞர் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் பணியாற்றுகிறார். பின்னணி பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும்மலையாள திரையுலகில் அன்னையும் ரசூலும் மூலம் அறிமுகமானார் .
Andrea Jeremiah
மற்ற இசையமைப்பாளர்களின் இயக்கத்தில் பாடுவதைத் தவிர, ஆண்ட்ரியா தனது சொந்த இசையையும் தயாரிக்கிறார். தரமணி படத்திற்கான ப்ரோமோஷனாகா "தரமணியின் ஆத்மா" என்ற தனிப்பாடலை இசையமைத்து, எழுதி, பாடினார் . அவர் பல இசை கருப்பொருள்கள், பாடல்கள் மற்றும் ஆல்பங்களை இயற்றியுள்ளார்.
Andrea Jeremiah
தற்போது மிஷ்கினின் பிசாசு 2, அனல் மேல் பணி தூளி ,கா ,மாளிகை, செல்லக்கூடாது, பாபி ஆண்டனியின் பெயரிடப்படாத படம், தினேஷ் செல்வராஜ் படம், வட்டம் உள்ளிட்ட படவாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரியா குரலில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஓ..சோல்ட்ரியா மாமா பாடல் குறித்து அவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
Andrea Jeremiah
அதாவது புஷ்பா படத்திலிருந்து வெளியான ஊ சொல்றியா மாமா பாடலை தனது நீண்ட கால நண்பரான இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாடலை பாடச்சொல்லியதால் சில வரிகளை பாடியதாகவும்,. ஆனால் தனக்கு திருப்தியாக இல்லை. அதனால் தன்னால் பாட முடியாது என மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் டிஎஸ்பி தன்னை கட்டாயப்படுத்தினார். ஊக்கப்படுத்தினார். அதன் பிறகுதான் நான் அந்த பாடலை பாடினேன். ஊ சொல்றியா பாடல் ஹிட்டாக டிஎஸ்பிதான் காரணம் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.