- Home
- Cinema
- சினிமாவில் வந்த பிசாசுகளில் இதுதான் பெஸ்ட் பிசாசு..? ஆண்ட்ரியாவின் கிளாமர் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்
சினிமாவில் வந்த பிசாசுகளில் இதுதான் பெஸ்ட் பிசாசு..? ஆண்ட்ரியாவின் கிளாமர் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்
Andrea Jeremiah: ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், இதுவரை சினிமாவில் வந்த பிசாசுகளில் இதுதான் பெஸ்ட் பிசாசு என்று செல்லமாக கூறியுள்ளனர்.

Andrea Jeremiah:
தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா, தற்போது பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். படவாய்ப்பு இல்லாததால் ஆடையில்லாமல் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்ததாக தெரிவித்துள்ளார்.
Andrea Jeremiah:
துணிச்சலான கதைப்பாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா, நடிப்பில் இதுவரை ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், தரமணி , வடசென்னை, அரண்மனை 1 மற்றும் அரண்மனை 3, மாஸ்டர், வடசென்னை உள்ளிட்ட படங்கள் வெளியாகி இவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தை கொடுத்தது.
Andrea Jeremiah:
அந்த வரிசையில் மற்றுமொரு படைப்பாக ஆண்ட்ரியா, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் படத்தின் தேவைக்கு ஏற்ப சில காட்சிகளில் ஆடையில்லாமல் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
Andrea Jeremiah:
மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த 'பிசாசு 2' படத்திற்கு முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு கஷ்டங்களை சந்தித்த ஆண்ட்ரியா இந்தப் படம் வெளியான பின்னர் தன்னுடைய திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
Andrea Jeremiah:
இந்த நிலையில், இந்த பிசாசு 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ல் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்திற்கான முயற்ச்சியில் ஆண்ட்ரியா தற்போது இறங்கியுள்ளார். இதற்காக புதிய லுக்கில் போஸ் கொடுத்து, புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
Andrea Jeremiah:
ஆண்ட்ரியாவின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், இதுவரை சினிமாவில் வந்த பிசாசுகளில் இதுதான் பெஸ்ட் பிசாசு என்று செல்லமாக கூறியுள்ளனர். தற்போது அவரின் கிளாமர் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. மேலும், ஆண்ட்ரியா கைவசம் தற்போது அனல் மேல் பணி தூளி ,கா, மாளிகை, செல்லக்கூடாது, வட்டம் உள்ளிட்ட படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.