- Home
- Cinema
- Sreenidhi: சிம்பு எனக்கு அண்ணன் மாதிரி...பேட்டியில் அந்தர் பல்டி அடித்த ஸ்ரீநிதி...? ஷாக்கான நெட்டிசன்கள்..
Sreenidhi: சிம்பு எனக்கு அண்ணன் மாதிரி...பேட்டியில் அந்தர் பல்டி அடித்த ஸ்ரீநிதி...? ஷாக்கான நெட்டிசன்கள்..
TV Serial Actress Sreenidhi: சிம்புவை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டு தர்ணாவில் ஈடுபட்ட ஸ்ரீநிதி, சமீபத்திய பேட்டியில் சிம்பு தனக்கு அண்ணன் மாதிரி என்று விளக்கம் அளித்துள்ளார்.

sreenidhi
சின்னத்திரை நடிகைகளும், சினிமா நடிகைகளுக்கு இணையாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றனர். அதனால், சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது இணையத்தில் செம்ம வைரலாக மாறிவிடும். இதனால், தன்னை பிரபலம் படுத்தும் போது, ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கி விடுகின்றனர். அப்படி சமீப காலமாக பல்வேறு சர்சைகளில் சிக்கியவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி.
மேலும் படிக்க...முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?
நடிகை ஸ்ரீநிதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். அதனை தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில் அண்மையில் நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் எழுந்தது. தொடர்ந்து, சில நாட்கள் கழித்து சீரியல் நடிகை நட்சத்திரா உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதனை தொடர்ந்து அவரது அம்மா, ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
sreenidhi
இவர் அண்மையில் மன அழுத்தம் காரணமாக ஸ்ரீநிதி சிகிச்சை எடுத்து வருகிறார். அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் மன அழுத்தத்தில் இருப்பதாக அழுது கொண்டே வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஷகிலாவுக்கு இவர் அளித்த பேட்டி ஒன்றில், சிம்பு உன்னை உண்மையில் காதலிக்கிறாரா ..? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி, சிம்பு என்னை காதலிப்பதாக சொன்னது உண்மை தான். ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை.
sreenidhi
நான் அப்போது எமோஷனலாக இருந்தேன். அதனால், சிம்பு என்னை லவ் பண்ணியதாக நானாகவே, கற்பனை பண்ணிக் கொண்டேன். அது என்னுடைய கற்பனை தான். ஆனால் அதன் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் என்னை பற்றி ஒரு விஷயம் கூட மனம் திறந்து பேசவில்லை, என்று யோசித்தேன். அதன்பிறகு, என்னை நான் மாற்றிக்கொண்டேன்.
மேலும் படிக்க...முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?
sreenidhi
தற்போது நான் அந்த கற்பனையில் இருந்து வெளியே வந்து விட்டேன். சிம்புவை நான் காதலிக்கவில்லை, சிம்புவும் என்னை காதலிக்கவில்லை. ஆனால் எனக்கு சிம்புவை பிடிக்கும்.” என்று தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள ஷகிலா, சிம்பு அவளுக்கு அண்ணன் போன்றவர். இனி யாரும் இவரை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க...முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.